மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

கூடங்குளம்: 3, 4-வது அணு உலைக்கு இன்று பூமி பூஜை

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் அமையவிருக்கும் மூன்றாவது மற்றும் நான்காவது அணு உலைகளுக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.

News image
Updated On :17 பிப்ரவரி 2016, 10:48 am

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் அமையவிருக்கும் மூன்றாவது மற்றும் நான்காவது அணு உலைகளுக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.

ரஷ்ய நாட்டு உதவியுடன் இந்த இரு அணு உலைகளும் அமைக்கப்படுகிறது.

கூடங்குளத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் வளாக இயக்குநர் ஆர்.எஸ்.சுந்தர், மூன்றாவது மற்றும் நான்காவது அணு உலைகளுக்கான இயக்குநர் பி.ஏ.பிள்ளை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கடந்த 2014 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் ரஷ்யா இடையே ஏற்பட்ட உடன்படிக்கையின்படி இந்த மூன்றாவது மற்றும் நான்காவது அணு உலைகள் அமைக்கப்படுகிறது. இரு அணு உலைகளும் தலா 1000 மெகா வார்ட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும். அணு உலை கட்டுமானப் பணிகள் வருகிற ஏப்ரல் மாதம் தொடங்கப்படும் என கூடங்குளம் அணுமின் நிலைய அதிகாரிகள் கூறினர்.

கூடங்குளத்தில் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது அணு உலை பல்வேறு போரட்டங்களுக்குப் பிறகு கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் வர்த்தக ரீதியிலான மின் உற்பத்தியை தொடங்கியுள்ளது. இரண்டாம் அணு உலைகளுக்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் இரண்டாம் அணு உலை இயங்கத் தொடங்கும் எனத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.