வரவிருக்கும் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் திமுக இடையே கூட்டணி ஏற்பட கூடும் என தகவல்கள் வரும் நிலையில், மரியாதை நிமித்தமாகவே கருணாநிதியை சந்திக்க உள்ளதாக காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் கூறினார்.
சென்னை வந்துள்ள காங்கிரஸ் தலைவர் நாளை திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் மு.கருணாநிதியை சந்திக்கிறார்.
இந்த சந்திப்பு குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஆசாத், கருணாநிதியுடன் சந்திப்பு என்பது மரியாதை நிமித்தமானது. ஒவ்வொரு முறையும் சென்னை வரும் போது திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க தவறுவதில்லை என்றார் ஆசாத்.
ஆசாத், தன்னுடன் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு பொறுப்பாளர் முகுல் வாசினிக், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் இ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோரை அழைத்து செல்கிறார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி மத்தியில் ஆட்சியில் இருந்த போது காங்கிரஸ் கூட்டணியில் 2004 ஆம் ஆண்டு இணைந்த திராவிட முன்னேற்ற கழகம், இலங்கை பிரச்சனையால் கூட்டணியிலிருந்து கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியேறியது. கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் இரு கட்சிகளும் தனித்தனியே போட்டியிட்டன.
இந்நிலையில் தமிழகத்தை ஆளும் அதிமுகவை வீழ்த்தும் நோக்கில் வலிமையான கூட்டணி அமைக்கும் முயற்சியில் திமுக தலைவர் கருணாநிதி முயற்சி மேற்கொண்டு வருகிறார். அவர் விஜயகாந்த் தலைமையிலான தேசிய முற்போக்கு திராவிட கழகம் மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்நிலையில் நாளை நடைபெறும் இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாபநாசம் நாதக வேட்பாளர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும்: சீமான்

பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்!

யார் அனுமதி கொடுத்தது? பத்திரிகையாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட துணை ஆணையர்!

உலகக் கோப்பை: ஈரானுக்குப் பதிலாக விளையாட டிரம்ப் விடுத்த அழைப்பை நிராகரித்த இத்தாலி!
வீடியோக்கள்

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை


