பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

அக்.11-ல் மனிதநேய மக்கள் கட்சி பொதுக்குழுக் கூட்டம்: ஜவாஹிருல்லாவுக்கு அழைப்பு

மனித நேய மக்கள் கட்சியின் அதிகாரபூர்வமான பொதுக் குழுக் கூட்டம் தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படவுள்ளதாக அந்த கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக அண்மையில்

News image
Updated On :9 ஜனவரி 2024, 6:55 am

கே.பி. அம்​பி​கா​பதி

மனித நேய மக்கள் கட்சியின் அதிகாரபூர்வமான பொதுக் குழுக் கூட்டம் தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படவுள்ளதாக அந்த கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக அண்மையில் அறிவிக்கப்பட்ட பொதுச் செயலாளர் தமீமுன் அன்சாரி தெரிவித்தார்.

மேலும் கூட்டத்தில் பங்கேற்க கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லாவுக்கு அவர் வெள்ளிக்கிழமை அழைப்புவிடுத்துள்ளார்.

நாகை மாவட்டம்,வேதாரண்யம் வந்த தமீமுன் அன்சாரி,தனது சொந்த ஊரான  தோப்புத்துறை புதுப்பள்ளிவாசலில் நடைபெற்ற சிறப்பு தொழுகைக்கு பின்னர், ஜமாத்தார், பல்வேறு கட்சிகளை சேர்ந்த பிரமுகர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்திப்பில், தனி மனித செயல்களுக்கு முக்கியத்துவம் அளிக்காமல், சொந்த கசப்புகளை விட்டுவிட்டு கட்சியின் நலனுக்காக சேர்ந்து செயல்படுவோம் என அவர் ஜவாஹிருல்லாவுக்கு அழைப்பு விடுத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.