பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

விருதுநகரில் பூரண மதுவிலக்கு கோரி த.மா.கா சார்பில் கையெழுத்து இயக்கம்

விருதுநகர் நகர தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் மதுவிலக்கை அமுல்படுத்தக் கோரி பொதுமக்களிடம் கையெழுத்து பெறும் இயக்கம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :9 ஜனவரி 2024, 6:29 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் நகர தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் மதுவிலக்கை அமுல்படுத்தக் கோரி பொதுமக்களிடம் கையெழுத்து பெறும் இயக்கம் புதன்கிழமை நடைபெற்றது.

விருதுநகர் காந்தி சிலை அருகே நகர த.மா.கா சார்பில் நடந்த கையெழுத்து இயக்கத்திற்கு நகர தலைவர் ஜெயராஜ் தலைமை வகித்தார். வடக்கு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியம் முன்னிைலை வகித்தார். இதில், மாநில செயற்குழு உறுப்பினர் ராஜபாண்டியன் கலந்து கொண்டு முதலில் கையெழுத்திட்டு இயக்கத்தை தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து கச்சேரி சாலை முதல் தேசபந்து மைதானம் வரையில் தொடங்கிய முதல் நாளிலேயே பொதுமக்கள் 2500 பேரிடம் கையெழுத்து பெறப்பட்டது.

இது குறித்து வடக்கு மாவட்ட செயலாளர் க.பாலசுப்பிரமணியம் கூறுகையில்,  தமிழகத்தில் மது விலக்கை அமுல்படுத்த வலியுறுத்தி த.மா.கா சார்பில் ஒரு கோடி பேரிடம் கையெழுத்து பெரும் இயக்கம் நடத்தப்படும் என தலைவர் ஜி.கே.வாசன்  அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில் ஜி.கே.மூப்பனாரின் 84-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கையெழுத்து இயக்கம் தொடங்கியுள்ளது.

இதில், ஒவ்வொரு தொகுதியிலும் 20 ஆயிரம் பேரிடமும், வடக்கு மாவட்டம் சார்பில் 60 ஆயிரம் பேரிடமும் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட இருக்கிறது. இதில், விருதுநகர் பகுதியில் தொடர்ந்து முக்கிய சாலை பகுதி, குடியிருப்பு பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று பொதுமக்களிடம் வருகிற செப்-30ம் தேதி வரையில் பெறப்பட்டு தலைமைக் கழகத்திற்கு அனுப்பி வைக்கப்படும. அதையடுத்து, அக்.2ல் காந்தி ஜெயந்தி அன்று முழு மதுவிலக்கை அமுல்படுத்தக் கோரி கவர்னிடம் அளிக்கப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.