வீட்டிற்கு பட்டா வழங்க கோரி போராடும் 100 வயது சுதந்திர போராட்ட தியாகி
விருதுநகர் அருகே குடியிருந்து வரும் வீட்டிற்கு பட்டா வழங்க கோரி 100 வயது சுதந்திர போராட்ட தியாகி போராடி வருகிறார்.


விருதுநகர் அருகே குடியிருந்து வரும் வீட்டிற்கு பட்டா வழங்க கோரி 100 வயது சுதந்திர போராட்ட தியாகி போராடி வருகிறார்.
விருதுநகர் அருகே அயன்ரெட்டியபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பா.ராமசாமி(100). இவர் சத்தியகிரக போராட்டம், வெள்ளையனே வெளியேறு இயக்கம், பூமிதான இயக்கம் போன்றவற்றில் பங்கேற்றவர். இவருக்கு 4 மகன்களும், 3 மகள்கள் உள்ளனர். கிராமத்தில் சி.எஸ்.ஐ ஆரம்பப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். அந்த பள்ளியை மூடும் நிலையில் இருந்த காரணத்தால், அதை கிராம பொதுமக்கள் சார்பாக காந்திய கல்வி இயக்க நிலையமாக உருவாக்கினார். இதேபோல், கல்வி நிலையங்களை நாகம்பட்டி, அயன்ரெட்டிபட்டி, கோவில்பட்டி, சந்திரன்குளம் ஆகிய கிராமங்களில் பள்ளிகளை தொடங்கி நிர்வகித்து வந்தவர்.
சுதந்திர போராட்ட காலத்தில் காந்தி, காமராஜர் உள்ளிட்ட பல தலைவர்களுடன் நெருங்கி பழகியுள்ளார். அதன் அடிப்படையில் காமராஜர் அமைச்சர் ஆனதும் இவரை சந்தித்தார். அப்போது, பள்ளிகளை நடத்துவதற்கு தேவையான ஆசிரியர்களை நியமிக்க கோரிக்கை வைத்தார். அதையேற்று உடனே ஆசிரியர்களை நியமனம் செய்தார். அதோடு, பள்ளி முடிந்ததும் மாணவ, மாணவிகளை திரட்டி வெள்ளையனுக்கு எதிராக ஊர்வலமும் நடத்தி சுதந்திர போராட்ட எழுச்சியையும் ஏற்படுத்தியுள்ளார்.
இதுபோன்று வெள்ளையருக்கு எதிராக போராடியதால், இவரை கைது செய்து ஆந்திராவில் பெல்லாரியில் 6 மாதங்கள் சிறையில் அடைத்தனர். அதைத் தொடர்ந்து மீண்டும் ஆசிரியர் பணியை தொடர்ந்தார். இவர் இடையிடையே சிறை சென்று வந்த காரணத்தால் 17 ஆண்டுகளே ஆசிரியர் பணி செய்ய முடிந்தது. ஆசிரியர் பணிக்கு 20 ஆண்டுகள் நிறைவடைந்திருந்தால் ஓய்வூதியம் வழங்கும் நிலையிருந்ததால் அதையும் பெறமுடியாமல் போனது.
சுதந்திர போராட்டத்தில் பெருபங்கு வகித்த காரணத்தால், மதுரை விமானம் நிலையம் அருகே 5 ஏக்கர் நிலம் அரசு ஒதுக்கீடு செய்தது. அதையும், அவர் பூமிதான இயக்கத்தில் இருந்த காரணத்தால் வினோபாஜியிடம் வழங்கி விட்டார். தற்போது, எந்த சொத்தும் இல்லாத நிலையில், கிராமத்தில் புறம்போக்கு நிலத்தில் ஓட்டு அடுக்கு வீட்டில், தியாகி ஓய்வூதியம் ரூ.10 ஆயிரம் பெற்று வாழ்ந்து வருகிறார்.
இது குறித்து அவரது மருமகள் ஆண்டாள் அம்மாள் கூறுகையில், நாட்டிற்காக பாடுபட்டு பலமுறை சிறை சென்று வந்துள்ளார். தற்போது, குடியிருக்கும் ஓட்டு வீடு புறம்போக்கு நிலத்தில் இருப்பதாக கூறி கிராமத்தினர் தொந்தரவு செய்கின்றனர். அதனால், இந்த வீட்டிற்கு மாவட்ட நிர்வாகம் பட்டா வழங்க வேண்டும் என்றார்.
மேலும், நல்லாசிரியர் விருதுபெற்ற சங்கரவேல்(73) கூறுகையில், நான் இவர் ஆரம்பித்த பள்ளியில் படித்தவன். அதோடு, பள்ளி மாணவ, மாணவிகளை பேரணியாக அழைத்துச் சென்று வெள்ளையனே வெளியேறு போராட்டத்தை நடத்தி, சுதந்திர உணர்வை ஏற்படுத்தினார். தற்போது, தனக்கு வழங்கிய இடத்தை கூட தானமாக வழங்கிவிட்டு, தான் குடியிருக்கும் ஓட்டு வீட்டுக்கு பட்டா கேட்டு பல ஆண்டுகளாக போராடி வருகிறார். அதனால், மாவட்ட நிர்வாகம் உடனடியாக பட்டா வழங்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். புதுதில்லியில் நடைபெறும் சுதந்திர தினவிழாவில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி அலுவலகத்திலிருந்து தகவல் வந்துள்ளது. அதில், வயது முதிர்வு காரணமாக கலந்து கொள்ள முடியாத நிலையில் உள்ளதாக தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...