விருதுநகர் அருகே லாரி மீது தனியார் பேருந்து மோதல்: 25 பேர் காயம்
விருதுநகர் அருகே 4 வழிச்சாலையில் முன்னே சென்ற லாரி மீது தனியார் பேருந்து பின்புறமாக மோதிய விபத்தில் பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகள் 11 பேர் உள்பட பயணிகள் 25 பேர் காயம் அடைந்தனர்.


விருதுநகர் அருகே 4 வழிச்சாலையில் முன்னே சென்ற லாரி மீது தனியார் பேருந்து பின்புறமாக மோதிய விபத்தில் பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகள் 11 பேர் உள்பட பயணிகள் 25 பேர் காயம் அடைந்தனர்.
மதுரை மாட்டுத்தாவணியிலிருந்து-சிவகாசி நோக்கி புதன்கிழமை காலையில் தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இப்பேருந்தில் பொதுமக்கள் மற்றும் விருதுநகர்-சிவகாசி சாலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து் வரும் மாணவ, மாணவிகள் ஆகியோரும் பயணம் செய்தனர். அப்போது, தனியார் பேருந்து விருதுநகர் அருகே சத்திரெட்டியபட்டி வாகன நிறுத்தத்தை கடந்து செல்லும் போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் எதிர்பாரத விதமாக, முன்னே திருச்சியிலிருந்து திருநெல்வேலி நோக்கி சிமெண்ட் மூடைகளை ஏற்றி புறப்பட்டு கொண்டிருந்த லாரியின் பின்புறம் மோதியது.
இந்த விபத்தில் தனியார் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியதோடு, பயணிகளும் காயம் அடைந்தனர். இதில், மதுரை, திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகளான சாலினி(20), பூமாதேவி(20), அம்ருதா(22), ஏஞ்சலின்(22), கேத்தலின்(22), சுருதி(19), ரோகினி(22), ரேகா(18), அரவிந்த்(19), மனோஜ்கிருஷ்ணகுமார்(20), அஜ்ரப்ஹான்(22) மற்றும் பயணிகளான மஞ்சுளா(37), கார்த்திக்(23), சுமதி(27), கவிதா(34), பாண்டியன்(44), ஜெயந்தி(38), பூங்கோதை(52), லெட்சுமணன்(61), சுகந்தி(57), குமார்(51), குமரேசன்(42), சதாசிவம்(41), மாரியம்மாள்(50) உள்பட 25 பேர் படுகாயம் அடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த விருதுநகர் பாண்டியன் நகர் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அதேபோல், படுகாயம் அடைந்த மாணவிகளான ஏஞ்சலின், கேத்தரின் ஆகியோருக்கு முதலுதவிக்கு பின் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இது தொடர்பாக பாண்டியன் நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து திருமங்கலத்தைச் சேர்ந்த டிரைவர் உலகநாதனை கைது செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...