தற்போது, பொதுமக்கள் இயக்கமாக மாறியதை தொடர்ந்து தன்னெழுச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மது விலக்கை அமுல்படுத்தக்கோரி போராடும் அனைவருக்கும் எங்கள் கட்சி ஆதரவு அளிக்கும். அதேபோல், மதுவிலக்கு பிரச்னை குறித்து மாணவ, மாணவிகள் போராட்டங்களில் ஈடுபடாமல், பொதுமக்களுக்கு மது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் ஆர்வத்துடன் ஈடுபட வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கிழக்கு மாவட்ட செயலாளர் ராமராஜ், மத்திய தலைவர் வெள்ளைச்சாமி, மேற்கு மாவட்ட தலைவர் ராஜலிங்கம் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து மகளிர் அணியினர், கட்சியினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.