விருதுநகர் மாவட்டத்தில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்க நிரந்தர மையங்கள் அமைப்பு
விருதுநகர் மாவட்டத்தில் இதுவரையில் ஆதார் அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்காதவர்கள் பயனடையும் வகையில் அந்தந்த பகுதி வட்டாட்சியர் அலுவலகங்களிலும், நகராட்சி ஆணையாளர்


விருதுநகர் மாவட்டத்தில் இதுவரையில் ஆதார் அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்காதவர்கள் பயனடையும் வகையில் அந்தந்த பகுதி வட்டாட்சியர் அலுவலகங்களிலும், நகராட்சி ஆணையாளர் அலுவலகங்களில் நிரந்தர மையம் அமைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஆதார் அடையாள அட்டை என்பது அனைத்து நலத்திட்ட உதவிகளும் பெறுவதற்கான முக்கிய ஆவணம் என அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அதன் அடிப்படையில் 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் பதிவு பெற்று ஒப்புதல் சீட்டுக்கள் வைத்துள்ளவர்களுக்கு மட்டுமே புகைப்படம் எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
மேலும், ஒப்புதல் சீட்டுக்கள் இல்லாதவர்களுக்கு புகைப்படம் எடுக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். அவ்வாறு அறிவிக்கப்பட்ட பின் ஒப்புதல் சீட்டு இல்லாதவர்கள் மற்றும் 5 வயதிற்கு மேற்பட்ட கணக்கெடுப்பில் விட்டுப்போன நபர்கள் சம்பந்தப்பட்ட அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் நியமனம் செய்யப்பட்டுள்ள நிரந்தர மைய பொறுப்பு அலுவலரிடம் உரிய படிவத்தினை பூர்த்தி செய்து பொறுப்பு அலுவலர்களின் கையொப்பம் பெற்று புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம்.
ஆதார் அடையாள அட்டைகளுக்கு புகைப்படம் எடுக்காதவர்களுக்காக நிரந்தர மையங்கள் அமைக்கப்பட்டுள்ள பகுதிகளின் விவரங்கள் வருமாறு:
விருதுநகர்-வட்டாட்சியர் அலுவலகம், நகராட்சி ஆணையாளர் அலுவலகம்
சிவகாசி-வட்டாட்சியர் அலுவலகம்,நகராட்சி ஆணையாளர் அலுவலகம்
அருப்புக்கோட்டை-வட்டாட்சியர் அலுவலகம், நகராட்சி ஆணையாளர் அலுவலகம்
சாத்தூர்-வட்டாட்சியர் அலுவலகம், நகராட்சி ஆணையாளர் அலுவலகம்
ஸ்ரீவில்லிபுத்தூர்-வட்டாட்சியர் அலுவலகம், நகராட்சி ஆணையாளர் அலுவலகம்
ராஜபாளையம்-வட்டாட்சியர் அலுவலகம், நகராட்சி ஆணையாளர் அலுவலகம்
திருத்தங்கல்-நகராட்சி ஆணையாளர் அலுவலகம்,
காரியாபட்டி-வட்டாட்சியர் அலுவலகம்,
திருச்சுழி-வட்டாட்சியர் அலுவலகம்,
இக்குறிப்பிட்ட பகுதிகளில் கடந்த 5-ம் தேதி முதல் நிரந்தர மையம் அமைத்து செயல்பட இருக்கிறது. இம்மையத்தில் செவ்வாய்கிழமை தவிர ஞாயிற்றுக்கிழமை உள்பட அனைத்து நாள்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணிவரையில் செயல்படும். எனவே அனைத்து நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கும் வங்கி கணக்கிற்கும் ஆதார் அடையாள அட்டை தேவைப்படுவதால் பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கைரேகை, கருவிழி மற்றும் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...