சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

தமிழ்நாடு பொதுவிநியோக திட்ட ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம்

ரேசன் கடைகளில் இறக்கப்படும் அனைத்து பொருள்களுக்கும் முன் எடையிட்டு வழங்க வேண்டும் என தமிழ்நாடு பொதுவிநியோக திட்ட ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

News image
Updated On :5 ஜனவரி 2024, 7:37 am

எஸ். பாண்டியன்

ரேசன் கடைகளில் இறக்கப்படும் அனைத்து பொருள்களுக்கும் முன் எடையிட்டு வழங்க வேண்டும் என தமிழ்நாடு பொதுவிநியோக திட்ட ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விருதுநகர் காமராஜர் உடற்பயிற்சி கூட அரங்கத்தில் தமிழ்நாடு பொதுவிநியோக திட்ட ஊழியர் சங்கத்தின் சார்பில் மாவட்ட நிர்வாக குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் செந்தில்வடிவேலன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ராமுகருப்பையா முன்னிலை வகித்தார்.

இதில், தமிழ்நாடு பொதுவிநியோக திட்ட ஊழியர் சங்கத்தின் மாநில செயலாளர் செல்லம் கலந்து கொண்டு செயற்குழு கூட்டம் பற்றியும், ஊழியர்களின் நலன் கருதி எடுக்கப்பட்ட சங்கத்தின் நடவடிக்கைகள் குறித்தும் விளக்கமாக எடுத்துரைத்தார். மேலும், மாநில துணை பொதுச்செயலாளர் தொந்தியப்பன், மாநில அமைப்புச் செயலாளர் மாரிமுத்து, மாவட்ட பொருளாளர் குணசீலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில், அனைத்து நியாய விலைக்கடைகளுக்கும் ஒரு சீராக பொருள்கள் ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆய்வுக்கு வரும் அதிகாரிகள் விற்பனையாளர்களை தொந்தரவு செய்வதை தவிர்க்க வேண்டும். பொங்கல் பரிசு மற்றும் உள்தாள் இணைப்பு பணிகளில் ஈடுபடும் விற்பனையாளர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்க வேண்டும். நியாய விலைக்கடைகளில் இறக்கப்படும் பொருள்கள் அனைத்திற்கும் முன் எடையிட்டு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.