பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

திறப்புக்குக் காத்திருக்கும் மருத்துவமனைக் கட்டடம்

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.26 கோடி மதிப்பில்

News image
Updated On :2 ஜனவரி 2024, 7:28 pm

செங்கை பி. அமுதா

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.26 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் ஓராண்டுக்கும் மேலாக திறக்கப்படாமல் காத்திருக்கும் இக்கட்டடம் யார் வருகைக்காக காத்திருக்கிறது என்பது புரியாத புதிராகவே உள்ளது.

÷மருத்துவக் கல்லூரி மருத்துவனை ஆரம்பித்து 60 ஆண்டுகளுக்கும் மேலாகியும் மாணவர்களின் சேர்க்கை 50 ஆகவே இருந்து வந்தது. இக்கல்லூரி மருத்துவமனைக்குச் சொந்தமாக 426 ஏக்கர் உள்ளது.

÷இந்நிலையில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அதிகாரிகள், பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கையை 100- ஆக உயர்த்தித் தருமாறு கோரிக்கை விடுத்து மனுக்கள் அனுப்பிய வண்ணமே பல ஆண்டுகள்

கழிந்தன.

÷இந்நிலையில் தீவிர நடவடிக்கையை அடுத்து தலைமை சுகாதாரச் செயலர் மற்றும் சம்மந்தப்பட்ட டி.எம்.இ. அதிகாரிகள் பார்வையிட்டு துரித நடவடிக்கை மேற்கொண்டு மருத்துவமனையில் உள்நோயாளிப் பிரிவில் போதிய படுக்கை வசதி எண்ணிக்கை குறைந்திருப்பதும், அறுவை சிகிச்சை அரங்கு வசதி குறைந்திருப்பதும், மருத்துவக் கல்லூரி மாணவர்கள், செவிலியர், பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கும் விடுதி வசதியின்மை உள்ளிட்ட காரணங்களை அறிந்த அதிகாரிகளின் முயற்சியால் பல்வேறு நவீன வசதிகளை கொண்ட புதிய கட்டடம் கட்டுவதற்கு ரூ.26 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டன.

÷கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு புதிய கட்டடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு பொதுப்பணித் துறையினரால் கட்டுமானப் பணி தொடங்கப்பட்டு கட்டப்பட்டு வந்தது.

÷கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்ட பணி என்பதால் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக 2011 மார்ச் மாதம் திறப்பு விழாவுக்கு, பொதுப் பணித் துறையிடம் அனுமதி கேட்டனர். ÷ஆனால் பொதுப்பணித்துறை கட்டுமானப் பணி ஒப்பந்தம் 2011 மே மாதம் வரை அவகாசம் உள்ளது. கட்டுமானப் பணியும் முழுமையாக நிறைவடையவில்லை. மேலும் கட்டடம் திறந்து வைக்கப்பட்டால் கட்டட கட்டுமானப் பணி பாதியிலேயே நின்று விடும் எனக்கூறி மறுத்துவிட்டனர்.

÷இதையடுத்து கட்டப்பட்டு வந்த புதிய கட்டடம் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டுக்கும் மேலாக திறக்கப்படாமல் பாழடைந்து வருகிறது. மேலும் இக் கட்டடத்துக்கு குடிநீர் வசதி இன்னும் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெறவில்லை.

÷செங்கல்பட்டு பகுதிவாழ் மக்கள் மட்டுமின்றி, மருத்துவமனை அதிகாரிகள், பணியாளர்கள், பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் பல ஆண்டு காலங்களாக எதிர்பார்த்த செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாணவர்களின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்து கல்லூரி திறக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.÷இருந்தும் கட்டி முடிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் புதிய கட்டடம் யார் வருகைக்காக காத்திருக்கிறது என கட்டடத்தைப் பார்ப்பவர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.