பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்பு
/

எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிறுத்தப்படுமா? பயணிகள் எதிர்பார்ப்பு

திருவள்ளூர்: மாவட்டத் தலைநகராக உள்ள திருவள்ளூர் ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்லுமா? என பொதுமக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.  ÷சென்னை - அரக்கோணம் ரயில்வே மார்க்கத்தில் உள்ள த

News image
Updated On :2 ஜனவரி 2024, 5:58 pm

ப. சுஜித்குமார்

திருவள்ளூர்: மாவட்டத் தலைநகராக உள்ள திருவள்ளூர் ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்லுமா? என பொதுமக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

 ÷சென்னை - அரக்கோணம் ரயில்வே மார்க்கத்தில் உள்ள திருவள்ளூர் கடந்த 1997-ம் ஆண்டு மாவட்டத் தலைநகராக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது இங்கு 1 லட்சத்துக்கு மேற்பட்டோரும் வசித்து வருகின்றனர்.

 ÷மாவட்ட ஆட்சியர், எஸ்.பி., மாவட்ட நீதிமன்றம், பல்வேறு பொறியியல் கல்லூரிகள், தலைமை தபால் அலுவலகம் என பல்வேறு முக்கிய அரசு அலுவலகங்கள் திருவள்ளூரில் அமைந்துள்ளன.

 ÷பழமை வாய்ந்த வீரராகவர் திருக்கோயில், புட்லூர் மாரியம்மன், காக்களூர் ஆஞ்சநேயர் என பல்வேறு கோயில்கள் உள்ளன. அருகே உள்ள நேமம் கல்வி பகவான் கோயிலுக்கு வெளிமாநிலஙகளில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

 ÷திருவள்ளூர் அருகே காக்களூர் சிட்கோ தொழிற்பேட்டை, ஸ்ரீபெரும்புதூர் தொழிற்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் (அயல் மாநிலத்தவர் உள்பட) பணிபுரிந்து வருகின்றனர்.

 ÷சென்னை புறநகரில் தாம்பரத்தை போன்று திருவள்ளூரும் முக்கிய ரயில் நிலையமாக உள்ளது. அரக்கோணத்தில் இருந்து வரும் எக்ஸ்பிரஸ் ரயில்கள், புறநகர் மின்சார ரயில்கள் திருவள்ளூர் வழியாகதான் இயக்கப்படுகின்றன.

 ÷சென்னை எழும்பூரில் இருந்து செங்கல்பட்டு செல்லும் வழியில் உள்ள தாம்பரம் ரயில் நிலையத்தில் அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும் நின்று செல்கின்றன.

 ÷திருவள்ளூர் ரயில் நிலையத்தின் மூலம் நாள்தோறும் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் சென்று வருகின்றனர்.÷தெற்கு ரயில்வே நிர்வாகத்துக்கு மாதம் ரூ.2 கோடி வரை வருவாய் கிடைக்கிறது. பயணச்சீட்டு முன்பதிவு மையம் மூலம் ரூ.50 லட்சம் வரை வருவாய் ஈட்டப்படுகிறது.

 ÷ஆனால் இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த திருவள்ளூர் ரயில் நிலையம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து 40 கி.மீ. தூரத்தில் உள்ளது.

 ÷ஆனால் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிறுத்தப்படுவதில்லை. இதனால் லட்சக்கணக்கான பொதுமக்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர். சென்னை சென்ட்ரல் அல்லது அரக்கோணம் சென்றே வெளியூர்களுக்கு செல்ல வேண்டி உள்ளது.

 ÷திருவள்ளூர் ரயில் நிலையத்தில் 6 நடைமேடைகள் உள்ளன. இதில் 5 நடைமேடைகள் 24 பெட்டிகள் கொண்ட ரயில்களையும், நடைமேடை 2, 3 ஆகியவை 28 பெட்டிகள் கொண்ட ரயில்களையும் நிறுத்தும் வசதி உடையவை.

 ஏலகிரி எக்ஸ்பிரஸ், சப்தகிரி எக்ஸ்பிரஸ் போன்ற ரயில்களே தறபோது நின்று செல்கின்றன.

 சென்னை - கோவை எக்ஸ்பிரஸ் ரயில் (2675-2676), சென்னை - கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (2679-2680), சென்னை - பெங்களூர் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் (2639-2640), சென்னை - பெங்களூர் லால்பாக் எக்ஸ்பிரஸ் (2607-2608), சென்னை - மும்பை மும்பை எக்ஸ்பிரஸ் (6012-6011), சென்னை எழும்பூர் - கச்சகெüட எக்ஸ்பிரஸ்

 (7561-7562), சென்னை - மங்களூர் வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸ் (6627-6628), சென்னை - மேட்டுப்பாளையம் நீலகிரி விரைவு ரயில் (2671-2672) போன்ற எக்ஸ்பிரஸ் ரயில்களை திருவள்ளூரில் நிறுத்த வேண்டும்.÷

 இதனால் திருவள்ளூர், திருநின்றவூர், ஸ்ரீபெரும்புதூர், பட்டாபிராம், ஊத்துக்கோட்டை, கடம்பத்தூர், பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் பயன்பெறுவர். தாம்பரம் போன்று திருவள்ளூரையும் ரயில் முனையமாக மாற்றினால் மிகுந்த பயன் உண்டாகும்.÷திருவள்ளூர் நகராட்சிக் கூட்டத்திலும் எக்ஸ்பிரஸ் ரயில்களை நிறுத்திச் செல்ல வேண்டும் என தலைவர் பாஸ்கரன் தீர்மானம் நிறைவேற்றி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.