திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க ரூ. 100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுவிட்டது; இடமும் தேர்வாகிவிட்டது. ஆனால், பணிகள்தான் கிடப்பில் உள்ளன. இதுதொடர்பாக அரசு விரைவாகப் பணிகளைத் தொடங்க வேண்டும் என்கின்றனர் நகர மக்கள்.
மாவட்டத்துக்கு ஒரு அரசு மருத்துவக் கல்லூரி என்ற கொள்கையின்படி, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டு வருகின்றன. கடந்த திமுக ஆட்சியில் விழுப்புரம், வேலூர், தருமபுரி, சிவகங்கை உள்ளிட்ட இடங்களில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன.
இந்நிலையில், கிராமங்கள் நிறைந்த திருவண்ணாமலை மாவட்டத்தில், திருவண்ணாமலையில்தான் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை இயங்கி வருகிறது. வந்தவாசி, செய்யாறு, ஆரணி, போளூர், செங்கம், தண்டராம்பட்டு பகுதிகளில் சிறிய அளவிலான மருத்துவமனைகளை உள்ளன. திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற வருவோரை உடனே வேலூருக்கோ, புதுச்சேரிக்கோதான் அனுப்பி வருகின்றனர். இதனால் வழியிலேயே உயிரிழப்புகளும் ஏற்பட்டன. இதைக் கருத்தில் கொண்ட முந்தைய திமுக அரசு திருவண்ணாமலையில் அரசு மருத்துவக் கல்லூரி ரூ. 100 கோடியில் தொடங்கப்படும் என அறிவித்தது.
பெருந்திட்ட வளாகத்தில் 25 ஏக்கர் நிலம் தேர்வு
இதற்காக திருவண்ணாமலையை அடுத்த கனந்தம்பூண்டி, வேங்கிக்காலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் இடங்கள் தேர்வு செய்யப்பட்டன.
இறுதியாக ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள 25 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. அடிக்கடி போக்குவரத்து வசதி, மக்கள் நடமாட்டம், உள்ளிட்டவற்றைக் கருத்தில்கொண்டு இந்த இடம் தேர்வு செய்யப்பட்டது. மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிக்காக ரூ. 100 கோடி நிதியும் ஒதுக்கப்ப்ட்டது. சென்னையில் இருந்தே விடியோ கான்ஃபரன்ஸிங்கில் அப்போதைய முதல்வர் கருணாநிதியும் அடிக்கல் நாட்டினார். மேலும், இத்திட்டத்துக்காக சிறப்பு அதிகாரியும் நியமிக்கப்பட்டார். ஆனால், அதற்குள் பேரவைத் தேர்தல் வந்து விட்டதால் மருத்துவக் கல்லூரிப் பணிகள் முடங்கிவிட்டன.
கிடப்பில் பணிகள்?
இந்நிலையில், அதிமுக அரசு பொறுப்பேற்று 6 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் மருத்துவக் கல்லூரிக்கான பணிகள் தொடங்கும் அறிகுறியே தென்படவில்லை என்றே நகர மக்கள் கருதுகின்றனர்.
இப்போது அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பணிகளை ஆரம்பித்தாலும் அவற்றை நிறைவு செய்ய குறைந்தது 3 ஆண்டுகள் ஆகும். எனவே, இதற்கான பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டும் பொதுமக்களின் எதிர்பார்ப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தொகுதி அலசல்: விருகம்பாக்கம்! நட்சத்திரங்களின் தொகுதியில் மும்முனைப் போட்டி!
கூட்டணிக் கட்சிகளின் பலத்துடன் தேமுதிக - ஐஜேகே!

திருச்சியில் 234 தொகுதிகளுக்கான 80,873 அஞ்சல் வாக்குகள் பிரிப்பு! தோ்தல் அலுவலா்களிடம் ஒப்படைப்பு!

தொகுதி அலசல் முசிறி! திமுக - அதிமுக கடும் போட்டி!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


