1994-ல் ஒரு ஏக்கர் நிலம் 1 லட்சம் விலை குறைவு என ஒசூர் நீதிமன்றத்தில் விவசாயிகள் முறையீடு செய்தனர். ஒசூர் நீதிமன்றம் விவசாயிகளுக்கு 4,77,600 இழப்பீடாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. சிப்காட் நிறுவனம் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தது. சென்னை உயர்நீதிமன்றம் ஒரு ஏக்கர் நிலத்தின் விலை, கூடுதல் சந்தை மதிப்பு, வெகுமதி தொகை, வட்டி என 14,75,000 விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. 2007-ல் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு 22 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. ஆனால் விவசாயிகளுக்கு இந்தத் தொகையை சிப்காட் நிறுவனம் வழங்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.