மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

வற்றிப்போன குசஸ்தலை ஆறு: விவசாயிகள் கவலை

திருத்தணி, மே 2: திருத்தணி பகுதியில் இந்த ஆண்டும் மழை இல்லாத நிலையில், குசஸ்தலை ஆறு 6 ஆண்டுகளாக வறண்டு காணப்படுகிறது. இது விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது. திருத்தணியை ஒட்டி விவசாயத்தை சார்ந்த சொரக்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:52 pm

திருத்தணி, மே 2: திருத்தணி பகுதியில் இந்த ஆண்டும் மழை இல்லாத நிலையில், குசஸ்தலை ஆறு 6 ஆண்டுகளாக வறண்டு காணப்படுகிறது. இது விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

திருத்தணியை ஒட்டி விவசாயத்தை சார்ந்த சொரக்காய்பேட்டை, பொதட்டூர்பேட்டை, பள்ளிப்பட்டு, நல்லாட்டூர், பூனிமாங்காடு, நெமிலி, ஆற்காடு குப்பம், உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப் பகுதியில் நெல், சோளம், மக்காச் சோளம், கரும்பு, மா, கொய்யா, வாழை உள்ளிட்டவை பயிர் செய்யப்படுகின்றன.

இப் பகுதி விவசாயிகள் பெரும்பாலானோர் மழை நீரை நம்பியும், குசஸ்தலை ஆற்று நீரை நம்பியும் விவசாயம் செய்து வருகின்றனர்.  இந்நிலையில் இப் பகுதியில் இந்த ஆண்டும் மழை குறைவாகவே பெய்ததால் குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் தற்போது வறண்டு காணப்படுகின்றன.

  இப் பகுதியில் குசஸ்தலை ஆற்றில் தண்ணீர் கடுகளவு கூட இல்லை. பல ஆண்டுகளாகவே மழைக்குறைவு காரணமாக ஆறு வறண்டு விடுவதால் இப்பகுதியில் குடிநீர் ஆதாரம் பாதிக்குமோ என்ற பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.

மழை குறைந்ததால் மா, துவரம் போன்ற விவசாயப் பயிர்களில் பூக்கள் சரிவரப் பூக்கவில்லை.

அப்படி சில மரங்களில் பூத்த பூக்களும் கடும் வெயிலால் உதிர்ந்து வருகின்றன. இதனால் இந்த ஆண்டு மாம்பழ உற்பத்தி குறைவாகவே இருக்கும் என விவசாயிகள் தெரிவிக்கிறார்கள்.

இந்நிலையில் போர்வெல் மூலம் கடந்த மாதங்களில் பயிர் செய்த விவசாயப் பயிர்களும் தண்ணீரின்றி காய்ந்து வருகின்றன.

 மின் பற்றாக்குறை காரணமாக நகர்ப் பகுதியில் 3 மணி நேரம் மின்விநியோகம் தடை செய்யப்படும் நிலையில் கிராமப் பகுதியில் கணக்கு வழக்கு இல்லாமல் மின்சாரம் துண்டிக்கப்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.