மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

அவதி: வகுப்பு உண்டு அமர முடியவில்லை; தொட்டி உண்டு குடிநீர் இல்லை

திருத்தணி, ஜூன் 14: ஆர்.கே.பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதி இல்லாமல் மாணவிகள் கடுமையாக அவதிப்படுகின்றனர். ÷திருத்தணியை அடுத்த ஆர்.கே.பேட்டை - சோளிங்கர் சாலையில் அரசு மகளிர் மேல்நி

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:42 pm

திருத்தணி, ஜூன் 14: ஆர்.கே.பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதி இல்லாமல் மாணவிகள் கடுமையாக அவதிப்படுகின்றனர்.

÷திருத்தணியை அடுத்த ஆர்.கே.பேட்டை - சோளிங்கர் சாலையில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் ஆர்.கே.பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள 20}க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட மாணவிகள்  பயின்று வருகினறனர்.

÷கடந்த 2008-ம் ஆண்டுவரை உயர்நிலைப் பள்ளியாக செயல்பட்டு வந்தது. 2009 ஆண்டு மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. தரம் உயர்த்தப்பட்டதால் ஆண்டுதோறும் மாணவிகள் சேர்க்கை அதிகரித்து வருகின்றது. ஆனால் பள்ளியில் மாணவிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லை.

இப்பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு வகுப்பறைகள் சிமென்ட் ஷீட்டுகளிலான மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது சிமென்ட் ஷீட்டுக்கள் உடைந்து எந்த நேரத்திலும் இடிந்து மாணவிகள் தலையில் விழும் நிலையில்

உள்ளது. இதனால் மாணவிகள் வகுப்பறையில் அமர்ந்து பாடம் படிப்பதற்கு பயப்படுகின்றனர். சில ஆசிரியர்கள் வகுப்பறையில் உட்கார்ந்து பாடம் நடத்துவதற்கு பயந்து பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தடி நிழலில் அமரவைத்து பாடம் கற்பிக்கின்றனர்.

÷மேலும் குடிநீர் இல்லாததால் மாணவிகள் பிளாஸ்டிக் கேன்களில் கொண்டு வருகின்றனர். பள்ளியில் குடிநீர் தொட்டி இருந்தும் அதில் குடிநீர் ஏற்றி விநியோகம் செய்யப்படுவதில்லை.

பள்ளி இடைவேளை விடும் நேரத்தில் மாணவிகள் குடிநீருக்காக பள்ளி அருகே உள்ள ஓட்டல்கள், குளிர்பானக் கடைகள் மற்றும் டீக்கடைகளுக்குச் சென்று குடிநீர் குடித்தும் வாட்டர் கேன்களில் நிரப்பியும் வருகின்றனர்.

÷இடைவேளை 10 நிமிஷமே இருப்பதால் பாதி மாணவிகள் குடிநீர் அருந்தாமலேயே தாகத்துடன் வகுப்புக்கு செல்ல வேண்டிய பரிதாப நிலை உள்ளது. பள்ளியில் கட்டியுள்ள குடிநீர் தொட்டியின் குழாய்கள் அனைத்தும் உடைந்து கிடக்கின்றன. மேலும் பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததால் தினமும் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் புகுந்து மது அருந்திவிட்டு பாட்டில்களை வீசிவிட்டுச் செல்

கின்றனர். ÷ஓராண்டாக பள்ளியின் கேட் பூட்டியே கிடக்கிறது. பள்ளியில் கட்டப்பட்டுள்ள கழிப்பிடத்தில் தண்ணீர் இல்லாததால் அதை மாணவிகள் பயன்படுத்துவதில்லை. ÷தற்போது இருக்கும் மாணவிகளுக்கே போதிய இடமில்லாமல் தவிக்கும்போது, புதிதாக வரும் மாணவிகளை எங்கே அமர்த்தி பாடங்கள் எப்படி நடத்தபோகிறார்கள் என அப்பகுதி மக்கள் புலம்புகின்றனர்.

÷எனவே இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இப்பள்ளிக்கு நேரில் வந்து ஆய்வு செய்து சுற்றுசுவர், குடிநீர் பிரச்னை, மற்றும் கழிப்பிட வசதியை ஏற்படுத்தித் தருமாறு மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

வேகத்தடை தேவை

÷ஆர்.கே.பேட்டை - சோளிங்கர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஆயிரக்கணக்கான நான்கு மற்றும் இரு சக்கர வாகனங்கள் அதிக வேகத்துடன் செல்கின்றன.

 அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியிருப்பதால் மதிய உணவு இடைவேளை, மற்றும் பள்ளி முடிந்ததும் மாணவிகள் சாலையைக் கடக்கின்றனர். அப்போது அவ்வழியாக வரும் வாகனங்கள்  மாணவிகளின் மீது மோதி விபத்துக்குள்ளாகிறது. ÷அவர்களின் கோரிக்கையை ஏற்று கடந்த ஆண்டு வரை பள்ளி வாசல் எதிரில் வேகத்தடை அமைக்கப்பட்டிருந்தது. தற்போது நெடுஞ்சாலை துறையினர் திடீரென வேகத் தடையை அகற்றியுள்ளனர். இதனால் மாணவிகள் சாலையை கடக்க அச்சப்படுகின்றனர்.

÷விபத்து நடக்கும் முன்பு மீண்டும் இப்பள்ளி முன்பு நெடுஞ்சாலைத் துறையினர் வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.