பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

ரூ.27 கோடி இருந்தும் கிடப்பில் கிடக்கும் ரயில்வே மேம்பாலப் பணி

செங்கல்பட்டு, ஜூன் 9: செங்கல்பட்டு - திருக்கழுகுன்றம் ரயில்வே மேம்பாலம் உத்தரவுக்குப்  பின்னும் இழுபறியில் உள்ளது. ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கு காலதாமதம் ஏன்? என அன்றாடம் ரயில்வே கேட்டில் சிக்கி தவிக

News image
Updated On :27 டிசம்பர் 2023, 4:13 pm

செங்கை பி. அமுதா

செங்கல்பட்டு, ஜூன் 9: செங்கல்பட்டு - திருக்கழுகுன்றம் ரயில்வே மேம்பாலம் உத்தரவுக்குப்  பின்னும் இழுபறியில் உள்ளது. ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கு காலதாமதம் ஏன்? என அன்றாடம் ரயில்வே கேட்டில் சிக்கி தவிக்கும் செங்கல்பட்டு மக்கள், வேதனை அடைந்துள்ளனர்.

÷செங்கல்பட்டு-திருக்கழுகுன்றம் ரயில்வே மேம்பாலம் அமைக்க 15 ஆண்டுகளாக அரசு, பல்வேறு அமைப்புகள், பொதுமக்கள் சார்பில் போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டன.

÷அதன் விளைவாக ரயில்வே மேம்பாலத்துக்குண்டான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு 5 ஆண்டுகளுக்கு மேலாகிறது.

÷இந்நிலையில் மேம்பாலம் அமைக்க சம்மந்தப்பட்ட துறைகளில் அனுமதி பெறப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத் துறையும் கடந்த 3 மாதங்களாக மேம்பாலம் சம்மந்தப்பட்ட கோப்பு வந்து விடும், விரைவில் மேம்பாலம் கட்ட டெண்டர் விடப்போவதாக கூறிவருகின்றனர்.

÷இப் பணிக்கான மொத்த மதிப்பீட்டுத் தொகை ரூ.27 கோடி ஆகும் எனக் கூறப்படுகிறது. இவ்வளவு தெளிவாக உள்ள நிலையில் இதற்கான கோப்பு, நிலுவையில் உள்ளதாக கூறப்படுவதற்கு காரணம் என்ன என்பது இதுநாள் வரை புரியாத புதிராகவே உள்ளது.

÷செங்கல்பட்டு- திருக்குழுகுன்றம் ரயில்வே கேட் வழியாகதான், தென்மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்கள் அனைத்தும் செல்ல வேண்டியுள்ளது.

÷அப்படி செல்லும் போது ஒருதடவை கேட்டை மூடினால் 4 கி.மீ. தூரத்துக்கு செங்கல்பட்டு- திருக்கழுக்குன்றம் செல்லும் சாலையில் மொபெட்டிலிருந்து கார், ஆட்டோ, வேன் உள்ளிட்ட வாகனங்களும் லாரி, பஸ் போன்ற கனரக வாகனங்களும் நிற்பதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் செங்கல்பட்டு நகரமே சிக்கித் தவிக்கிறது. இதனால் அன்றாடப் பணிகளை செய்யவும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

÷அதுமட்டுமல்லாமல் இந்த ரயில்வே கேட் வாரத்துக்கு ஒருமுறை பழுதாகி லாக்காகி விடுகிறது. இது போல் கேட் லாக்காகும் சமயத்தில் 3 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு சரி செய்யப்படுகிறது.

÷இதனால் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் முதல் வேலைக்கு செல்வோர் வரை அவதிக்குள்ளாகின்றனர்.

÷இந்தவழியாகத்தான் கல்பாக்கம், மாமல்லபுரம், திருக்கழுககுன்றம், திருப்போரூர், கேளம்பாக்கம், தாழம்பூர் உள்ளிட்ட ஊர்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 200-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள மாணவர்கள் பள்ளிக்கு வருவதற்கும், வட்டாட்சியர் அலுவலகம், நீதிமன்றம், ஆர்டிஓ அலுவலகம் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்ல வேண்டும்.

÷அதே போன்று தாம்பரம் கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், சிங்கப்பெருமாள் கோயில், செங்கல்பட்டு காஞ்சிபுரம்  உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திருக்கழுக்குன்றம், மாமல்லபுரம், கல்பாக்கம் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லவேண்டும் என்றாலும் இவ்வழியில்தான் செல்ல வேண்டும்.

÷இந்நிலையில் மேம்பாலம் அமைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் இடங்களை சர்வே செய்து முடிந்துவட்டது. மேம்பாலம் அமைக்க நில எடுப்புக்காக நெடுஞ்சாலைத் துறையும், வருவாய்த்துறையும் பலமுறை நோட்டீஸ் கொடுக்கப்பட்டு பலமுறை நில எடுப்புக்கு ஆக்கிரமிப்பு செய்வதற்கு காவல்துறையுடன் ஜேசிபி பொக்லைன் வாகனங்களுடன் சென்று முயற்சிகள் கைவிடப்படுகின்றன.

÷ஆனால் ரூ.27 கோடியில் ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டதாகவும், இப் பணி டெண்டருக்காக செங்கல்பட்டு நெடுஞ்சாலைத் துறைக்கு வரவேண்டியதுதான் பாக்கி என்ற தகவல் கிடைத்தும் 3 மாதங்கள் கடந்து விட்டன.

÷இது போல் கிடப்பில் போடப்பட்ட ரயில்வே மேம்பாலப் பணிக்கு போர்கால அடிப்படையில் விடிவு ஏற்பட்டால் மட்டுமே இந்த போக்குவரத்து நெரிசலில் இருந்து செங்கல்பட்டு நகரமே தப்பித்து நிம்மதி பெருமூச்சு விடும் என்பதில் சந்தேகமில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.