போடி, ஜூன் 9: தேனி மாவட்டம், போடி பகுதியிலிருந்து கேரள மாநிலத்துக்குத் தொடர்ந்து ரேஷன் அரிசி, இலவச கலர் டி.வி. கடத்தப்படுகிறது. இதனைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு, ரூ. 1-க்கு 1 கிலோ அரிசியை தமிழக அரசு வழங்கி வருகிறது. ஆனால், ரேஷன் கார்டு வைத்துள்ள பலர் இதனை வாங்கிப் பயன்படுத்துவதாகத் தெரியவில்லை.
இதனால், இந்த குடும்ப அட்டைதாரர்களின் பெயர்களில், சில ஏஜெண்டுகள் ரேஷன் அரிசியை கடைகளில் இருந்து மொத்தமாக வாங்கி, அவற்றை கேரள மாநிலத்துக்கு கடத்துகின்றனராம்.
அங்கு ரேஷன் அரிசி சுத்தப்படுத்தப்பட்டு, கடைகளில் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. மேலும், அரவை மில்லுக்கு அரிசியை அனுப்பி மாவுப் பொருளாக மாற்றி, பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்கின்றனராம்.
தினமும், போடி பஸ் நிலையத்திலிருந்து மூட்டை, மூட்டையாக அரசு பஸ்கள், தனியார் வேன்களில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. அரசு பஸ்களில் இலவச கலர் டி.வி.களும் கடத்தப்படுகின்றனவாம். அதிகாரிகள் சோதனையிட வரும்போது, அரிசி மூட்டைகளின் மேல்புறம் காய்கறிகளை வைத்து மறைத்து விடுகின்றனராம். இதேபோல, கலர் டி.வி. உள்ள பெட்டிகளில் தெர்மாகோல் எனப்படும் பஞ்சுகளை அகற்றிவிட்டு, மிட்டாய் பாக்கெட்டுகளை அடுக்கி விடுவதாகக் கூறப்படுகிறது.
போடி பஸ் நிலையத்தில் சோதனை நடக்கும்போதெல்லாம், கடத்தல்காரர்களுக்கு முன்னதாகவே தகவல் போய் சேர்ந்துவிடுகிறதாம். இதனால் அரிசி மூட்டைகளை மட்டும் கைப்பற்றுகின்றனர். கடத்தல்காரர்கள் தப்பி விடுகின்றனர்.
20 மூட்டை ரேஷன் அரிசி கடத்தல்: இந்நிலையில, போடி பேருந்து நிலையத்தில், புதன்கிழமை பகலில் வட்ட வழங்கல் அலுவலர் ஷேக் அயூப், உதவியாளர் முத்துராஜ், கிராம நிர்வாக அலுவலர் கண்ணன் ஆகியோர் திடீர் சோதனை நடத்தினர்.
இதில் பஸ் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த 20 மூட்டை ரேஷன் அரிசி கைப்பற்றப்பட்டது. அவற்றைக் கடத்தியவர் தலைமறைவாகி விட்டதாகக் கூறப்படுகிறது.
இதேபோன்று கடத்தல்காரர்களின் மீது நடவடிக்கை எடுக்க முடியாததால், ரேஷன் அரிசிக் கடத்தல் தொடர்ந்து நடக்கிறது.
போடி பஸ் நிலையத்திலிருந்து கேரள மாநிலத்துக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவது குறித்து வட்ட வழங்கல் அலுவலகத்தில் விசாரித்தபோது, ரேஷன் அரிசி கடத்தப்படுவது குறித்து, தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.
பஸ் நிலையத்தில் அதிகாரிகளைப் பார்த்தவுடன் ரேஷன் அரிசியை போட்டுவிட்டு கடத்தல்காரர்கள் தலைமறைவாகி விடுகின்றனர். இதனால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை.
ரேஷன் அரிசி கடத்துவோர் பிடிபட்டால், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்கத்தில் யாராலும் ஊடுருவ முடியாது: அமித் ஷா

ஆயுஷ் மாத்ரேவுக்கு மாற்று வீரர் அறிவிப்பு!
ஜனநாயகக் கடமையில் அரசியல் தலைவர்கள்!

தேர்தலைப் புறக்கணித்த வேங்கைவயல் மக்கள்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

