திருத்தணி, ஜூலை 24: திருத்தணி அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வகுப்பறைகளில் மழைநீர் தேங்கி நிற்பதால், மாணவர்கள் உட்கார முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
திருத்தணி ஒன்றியத்துக்கு உட்பட்ட தாடூர் ஊராட்சி காலனியில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளியில் போதிய கட்டட வசதியில்லாததால் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களை ஒரே வகுப்பறையில் உட்கார வைத்து ஆசியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர்.
இக்கட்டடத்தின் மேற்கூரை சீமை ஓடுகளால் ஆனது. இக்கட்டடம் 25 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. தற்போது கட்டடத்தின் மேற்கூரை ஓடுகள் ஆங்காங்கே உடைந்துள்ளன. மேலும் கடந்த மே மாதம் சூறைக் காற்றுடன் பெய்த பலத்த மழையின் போது பள்ளி அருகில் இருந்த மரம் பள்ளிக் கட்டடத்தின் மீது விழுந்து மேற்கூரை முழுவதும் சேதமடைந்தது.
தற்போது பெய்து வரும் மழையால், பள்ளி வகுப்பறையில் குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் பள்ளி மாணவர்களை அருகில் உள்ள மகளிர் சுயஉதவிக்குழு கட்டடத்தில் அமர வைத்து ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர். இப்பள்ளிக்கு கூடுதல் கட்டடம் கட்ட வேண்டும், பழையக் கட்டடத்தை புதுப்பிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் பலமுறை கிராம சபை கூட்டத்தில் மனு கொடுத்தும் பலன் இல்லை என்கின்றனர்.
ஊராட்சித் தலைவர் மற்றும் ஒன்றிய நிர்வாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டி வருவதாகவும் புகார் எழுந்துள்ளது. எனவே இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுத்து தாடூர் காலனியில் இயங்கிவரும் தொடக்கப் பள்ளிக்கு கூடுதல் கட்டடத்தை கட்டித் தரவேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்கத்தில் யாராலும் ஊடுருவ முடியாது: அமித் ஷா

ஆயுஷ் மாத்ரேவுக்கு மாற்று வீரர் அறிவிப்பு!
ஜனநாயகக் கடமையில் அரசியல் தலைவர்கள்!

தேர்தலைப் புறக்கணித்த வேங்கைவயல் மக்கள்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


