திருத்தணி, ஜூலை 11: வீட்டுமனைப்பட்டா இல்லாததால் அரசு வழங்கும் தொகுப்பு வீடுகளை பெற முடியாமல் இருளர் இன மக்கள் 30 ஆண்டுகளாக பாழடைந்த மண் குடிசை வீடுகளில் வசித்து வருகின்றனர்.
ஆர்.கே.பேட்டையை அடுத்த சின்ன நாகபூடி ஊராட்சியில் அடங்கியுள்ளது இருளர் காலனி. வாழ்க்கையைப் போலவே நைந்து, பிய்ந்து போய் உள்ளது இவர்கள் வசிக்கும் மண் குடிசைகளும். வீட்டுப் மனைப்பட்டா, ரேஷன் அட்டை, சாதிச் சான்றிதழ் கேட்டு 10 ஆண்டுகளாக வருவாய் துறையினரிடம் மனு கொடுத்து வருகின்றனர். எதுவும் நிறைவேறவில்லை. வீட்டுமனை பட்டா இல்லாததால் அரசு வழங்கும் தொகுப்பு வீடு முடியவில்லை. இவர்களுக்கு பட்டா வழங்கலாம் என ஊராட்சி சார்பில் கிராமசபை தீர்மானம் நிறைவேற்றி அதற்கான நகலை ஆட்சியருக்கு அனுப்பியும் வருவாய் துறையினர் மெத்தனம் காட்டி வருகின்றனர்.
ஊராட்சி சார்பில் தெருவிளக்கு, குடிநீர் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் சாலை வசதி செய்து தரவில்லை. அதற்காக கொட்டப்பட்ட மண் அப்படியே கிடக்கிறது. தற்போது மழைகாலம் தொடங்கியுள்ள நிலையில் அவ்வப்போது பெய்துவரும் மழைக்கு மண் குடிசைகள் தாக்குப் பிடிக்க முடியாமல் இடிந்து விழும் நிலை உருவாகியுள்ளது.
இதுகுறித்து அப்பகுதி முதியோர் ஒருவர் கூறும்போது: இப்பகுதியில் குடியேறி 20 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை எத்தனையோ அதிகாரிகள் அவ்வப்போது வந்து பார்த்து செல்கிறார்களே தவிர நிரந்தரமாக இங்கு வாழ்வதற்கு பட்டா தரவில்லை.
அரசு உதவி மற்றும் சலுகைகள் பெற சாதிச் சான்றிதழ், வீட்டு மனைப்பட்டா, ரேஷன் கார்டு ஆகியவை அடிப்படைத் தேவை.
இருளர்கள் என்பதாலோ என்னவோ இவர்களின் கோரிக்கை வெளிச்சத்துக்கு வருவதேயில்லை. இருளர்களின் வாழ்க்கையில் விளக்கேற்றுவாரா மாவட்ட ஆட்சியர் என்பதுதான் இம் மக்களின் எதிர்பார்ப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்கத்தில் யாராலும் ஊடுருவ முடியாது: அமித் ஷா

ஆயுஷ் மாத்ரேவுக்கு மாற்று வீரர் அறிவிப்பு!
ஜனநாயகக் கடமையில் அரசியல் தலைவர்கள்!

தேர்தலைப் புறக்கணித்த வேங்கைவயல் மக்கள்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


