திருத்தணி, ஜன. 29: திருத்தணி நந்தி ஆற்றின் குறுக்கே உயர்நிலை மேம்பாலம் கட்டும் பணி மந்த நிலையில் நடைபெறுவதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருத்தணி- திருவள்ளூர் தேசிய நெடுஞ்சாலையில் காசிநாதபுரம் அருகே செல்லும் நந்தி ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த தரைப்பாலம் குறுகிய அளவில் இருந்ததால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டனர். மேலும், மழை காலத்தில் தரைப் பாலத்தின் மீது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் போது போக்குவரத்தும் தடைப்பட்டது. ÷இதையடுத்து, இங்கு உயர்நிலை மேம்பாலம் கட்ட தேசிய நெடுஞ்சாலைத் துறை ரூ.3.40 கோடி ஒதுக்கீடு செய்தது. இதற்கான பணிகள் கடந்த ஆண்டு, பிப்ரவரியில் தொடங்கியது. பிறகு மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் தாற்காலிகமாக பணிகள் நிறுத்திவைக்கப்பட்டன. மே மாதத்தில் இருந்து பணிகள் மீண்டும் மேற்கொள்ளப்பட்டன.
இப் பணிகள் மந்த நிலையில் நடைபெறுவதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். தற்போது திருத்தணியில் இருந்து சென்னை, திருவள்ளூர், நாகலாபுரம் ஆகிய இடங்களுக்குச் செல்லும் வாகன ஓட்டிகள் திருப்பதி புறவழிச் சாலை வழியாக 2 கி.மீ. சுற்றி வருகின்றனர். இந்த தொலைவைத் தவிர்க்கும் பொருட்டு, உயர்நிலை மேம்பாலம் அருகேயுள்ள சிறிய பாதையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஆற்றில் இறங்கி செல்லும் போது தவறி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.
இந்த பாலத்தை 15 மாதங்களில் கட்டி முடிக்க வேண்டும் என நெடுஞ்சாலைத் துறை கால அவகாசம் அளித்துள்ளது. தற்போது 10 மாதங்கள் ஆகியும், கட்டுமானப் பணிகள் மந்த நிலையிலேயே உள்ளன. இதனால், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே, இப் பணிகளை விரைவாக செய்து முடிக்க நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்துத் தரப்பினரின் எதிர்பார்ப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்கத்தில் யாராலும் ஊடுருவ முடியாது: அமித் ஷா

ஆயுஷ் மாத்ரேவுக்கு மாற்று வீரர் அறிவிப்பு!
ஜனநாயகக் கடமையில் அரசியல் தலைவர்கள்!

தேர்தலைப் புறக்கணித்த வேங்கைவயல் மக்கள்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


