பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

பஸ்ஸýக்காக படாத பாடுபடும் செங்கல்பட்டுவாசிகள்

செங்கல்பட்டு, அக். 8:  செங்கல்பட்டு வழியாகச் செல்லும் நெடுந்தூர பஸ்களில் தங்களை ஏற்றிச் செல்வதில்லை என செங்கல்பட்டு பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.   சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் அ

News image
Updated On :25 டிசம்பர் 2023, 3:53 pm

செங்கை பி. அமுதா

செங்கல்பட்டு, அக். 8:  செங்கல்பட்டு வழியாகச் செல்லும் நெடுந்தூர பஸ்களில் தங்களை ஏற்றிச் செல்வதில்லை என செங்கல்பட்டு பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

  சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்து பஸ்களும் செங்கல்பட்டு வழியாகத்தான் செல்கின்றன.

  செங்கல்பட்டில் இரண்டு பஸ் நிலையங்கள் உள்ளன. இங்கிருந்து தனியார் பஸ்கள், நகர பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.

  சென்னையிலிருந்து செங்கல்பட்டு வழியாக விழுப்புரம் செல்லும் பஸ்கள் செங்கல்பட்டு நகருக்குள் வருவதேயில்லை. அனைத்து பஸ்களும் புறவழிச்சாலை வழியாக இயக்கப்படுகின்றன.

  பண்டிகைக் காலங்களில் கூடுதல் பஸ்கள் விடப்படுவதாக அரசு அறிவிக்கும் இனிப்பான செய்தி செங்கல்பட்டு மக்களை பொறுத்தவரை கசப்பான செய்தியாகிறது. ஏனெனில் பண்டிகைக் காலங்களில் அரசு விரைவு பஸ்களும் மற்றும் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் நெடுந்தூர பஸ்களும் செங்கல்பட்டு நகருக்குள் நுழைவதேயில்லை. தென் மாவட்டங்களுக்குச் செல்ல காத்திருக்கும் செங்கல்பட்டு பயணிகள் நீண்டநேரம் பஸ்ஸýக்கு காத்திருந்துவிட்டு பிறகு புறவழிச் சாலைக்கோ, செங்கல்பட்டை அடுத்த புலிப்பாக்கம் அருகேயுள்ள டோல்கேட்டுக்கோ ரூ.100 கொடுத்து ஆட்டோக்களில் சென்று பஸ்களை பிடிக்க படாதபாடு படுகின்றனர்.

  சிலர் செங்கல்பட்டிலிருந்து தாம்பரம் அல்லது கோயம்பேடு சென்று அங்கிருந்து தென் மாவட்டங்களுக்கு பயணிக்கின்றனர். இதனால் பொதுமக்களுக்கு கூடுதல் செலவும், கூடுதல் பயணநேரமும் ஏற்படுகிறது. இதுதவிர, தென் மாவட்டங்களில் இருந்து செங்கல்பட்டு வழியாக சென்னை செல்லும் பஸ்களிலும் செங்கல்பட்டு பயணிகளை ஏற்றுவதில்லை. பஸ்கள் புறவழிச் சாலையில் செல்வதால் செங்கல்பட்டு பயணிகளை தாம்பரம் வரை பயணச்சீட்டு வாங்க வற்புறுத்துகின்றனர்.

  இதனால் செங்கல்பட்டில் இறங்க வேண்டிய பயணிகள் தாம்பரம் சென்று அங்கிருந்து மீண்டும் செங்கல்பட்டுக்கு வரவேண்டியுள்ளது. புறவழிச் சாலையில் இறக்கி விடுங்கள் என்று வற்புறுத்தினால், அவர்களை புறவழிச் சாலைக்கும் சுங்கச்சாவடிக்கும் இடையில் ஆள் நடமாட்டமில்லாத பகுதிகளில் இறக்கி விடுகின்றனர். அப் பகுதியில் பஸ்ஸýம் கிடைக்காமல் ஆட்டோவும் கிடைக்காமல் அச்சத்துடன் நகருக்குள் நடந்து வருகின்றனர்.

  தவறி புறவழிச் சாலையில் இறக்கி விட்டாலும் இரவு நேரத்தில் அங்கிருந்து செங்கல்பட்டு நகருக்குள் ஆட்டோவில் வர ரூ. 100 முதல் 150 வரை தர வேண்டியுள்ளது.

  புறவழிச்சாலை அமைக்கப்படுவதற்கு முன்பு எல்லா பஸ்களும் செங்கல்பட்டு நகருக்குள் வந்து சென்றன. புறவழிச்சாலை அமைக்கப்பட்ட பின்பு எந்த பஸ்ஸýம் நகருக்குள் நுழைவதில்லை. அனைத்து பஸ்களும் செங்கல்பட்டு நகருக்குள் வந்து செல்லவேண்டும் என்று பல அமைப்புகள் போராடிப் பார்த்து விட்டன. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனுக்களும் அனுப்பப்பட்டன. மேலும் சமீபத்தில் செங்கல்பட்டு எம்எல்ஏவும் இதற்காக முயற்சிகளை மேற்கொண்டார். எனினும் எவ்விதப் பயனும் இல்லை. இதுகுறித்து அரசு போக்குவரத்துக் கழக நிர்வாகம் சிந்தித்துப் பார்த்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என செங்கல்பட்டு மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.