சென்னை, நவ. 17: மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (யு.பி.எஸ்.சி.) முதல்நிலைத் தேர்வில் செயல்திறன் தேர்வு (ஆப்டிடியூட் டெஸ்ட் - அல்ற்ண்ற்ன்க்ங் பங்ள்ற்) என்ற புதிய பரிந்துரையால் பெரும்பாலான கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
யு.பி.எஸ்.சி. தேர்வெழுதி வெற்றி பெறுபவர்களில் சுமார் 60 சதவீதத்தினர் கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ். ஐ.எஃப்.எஸ். பணிகளுக்காக, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) மூலம் தேர்வுகள் நடத்தி தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இதற்காக முதல்நிலைத் தேர்வும், அதைத் தொடர்ந்து முதன்மைத் தேர்வும், நேர்காணலும் நடத்தப்படுகிறது.
இந்நிலையில், முதல்நிலைத் தேர்வில் செயல்திறன் தேர்வைக் கொண்டுவர திட்டமிட்டுள்ளது. இதற்கான பரிந்துரையை, யு.பி.எஸ்.சி. மத்திய அரசிடம் அண்மையில் அளித்துள்ளது.
"இம்மாதிரியான தேர்வுமுறை வங்கித் தேர்வுகளில்தான் பின்பற்றப்படுகிறது. இதேபோன்றதொரு பரிந்துரையை யு.பி.எஸ்.சி. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசிடம் அளித்தது. அப்போது, மாணவர்கள் தரப்பில் பலத்த எதிர்ப்பு கிளம்பியதால் அந்தப் பரிந்துரை மீது மத்திய அரசு எவ்வித மேல்நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்போது மீண்டும் அதே பரிந்துரையை மத்திய அரசிடம் அளித்துள்ளது' என்றார் தனியார் சிவில் சர்வீஸ் தேர்வு மைய இயக்குநர் குமரேஸ்வரி.
"ஐ.ஐ.டி. ஐ.ஐ.எம். கல்வி நிறுவனங்களில் படித்துவரும் மாணவர்கள்தான் பெரும்பாலும் செயல்திறன் தேர்வுக்கு தயாராகி வருபவர்கள். எனவே, யு.பி.எஸ்.சி. புதிய செயல்திறன் தேர்வு முறை மூலம் ஏராளமான கிராமப்புற மாணவர்கள்தான் பாதிக்கப்படுவர்.
கடந்த ஆண்டில் மதுரை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த வீரபாண்டியன் ஐ.ஏ.எஸ். ஆக தேர்ச்சி பெற்றார். இதுபோல ஒவ்வொரு ஆண்டும் கிராமப்புறத்தில் இருந்து தேர்ச்சி பெறுகிறவர்களின் விகிதம் அதிகமாகி கொண்டே இருக்கிறது. இச்சமயத்தில் யு.பி.எஸ்.சி. புதிய பரிந்துரையை வெளியிட்டுள்ளது' என்றார் அவர்.
"யு.பி.எஸ்.சி. புதிய பரிந்துரை மூலம் விருப்பப் பாடம் (ஆப்ஷனல்) இனி இருக்காது. அதற்குப் பதிலாக பொதுப் பாடம் (ஜெனரல் ஸ்டடிஸ்) மற்றும் செயல்திறன் தேர்வு மட்டுமே இருக்கும். கிராமப்புற மாணவர்கள் விருப்ப பாடத்தில் மட்டுமே கவனத்துடன் படித்து தேர்ச்சி பெறுகின்றனர். அவர்கள் பொதுப் பாடத்தில் அதிக கவனம் செலுத்துவதில்லை. இந்நிலையில் இந்த புதிய பரிந்துரை அமலுக்கு வந்தால் கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர்' என்றார் சிவில் சர்வீஸ் தேர்வில் முதன்மைத் தேர்வை எழுதியுள்ள சேகர்.
"ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு பாடத்திட்டம் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், யு.பி.எஸ்.சி. எல்லோருக்கும் ஒரே மாதிரியான பொதுவான தேர்வு முறையைக் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. ஆனால் மாநிலங்களில் வேறுபட்டுள்ள பாடத்திட்டங்களால், யு.பி.எஸ்.சி. புதிய பரிந்துரை எப்படி நிறைவேற்றப்படும் என்று தெரியவில்லை.
சி.பி.எஸ்.இ. மற்றும் நகர்ப்புறத்தில் உள்ள உயர்வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமே செயல்திறன் தேர்வு உள்பட பல போட்டி தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர். அவர்களுக்கு இணையாக கிராமப்புற மாணவர்களால் தேர்வுகளில் எப்படி சிறப்பாகச் செயல்பட முடியும்? யு.பி.எஸ்.சி. தேர்வுகளில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் கிராமப்புற மாணவர்களை ஒதுக்கத்தான் இந்தப் புதிய பரிந்துரை என்று எண்ணத் தோன்றுகிறது. மேலும் தேர்வு எழுதும் முயற்சிகளையும் குறைக்கவும் பரிந்துரைத்துள்ளது' என்றார் தனியார் சிவில் சர்வீஸ் பயிற்சி மையத்தைச் சேர்ந்த சங்கர்.
"செயல்திறன் தேர்வு குறித்த பரிந்துரை வெளிவந்தாலும், அதில் என்னென்ன தேர்வு பாடங்கள் இடம்பெறும் என்பது பற்றி தெளிவான விவரம் வெளியிடப்படவில்லை. நகர்ப்புறம் மற்றும் பிராந்திய மொழிகளில் படித்துவிட்டு வரும் கிராமப்புற மாணவர்களுக்கு இடையே ஏற்கெனவே பெரிய இடைவெளி உள்ளது. இந்நிலையில், இப்படியொரு புதிய பரிந்துரை யாருக்கு சாதக-பாதகமாக இருக்கும் என்பது தெரியவில்லை' என்றார் சிவில் சர்வீஸ் மாணவர் பாஸ்கர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!
சமந்தாவின் மா இன்டி பங்காரம் வெளியீட்டுத் தேதி!

இந்தியா-அமெரிக்கா இடையேயான இடைக்கால வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தை ஒத்திவைப்பு
சிரி... சிரி...
வீடியோக்கள்

Nanjil Sampath Latest Interview | சீமான் தமிழரே இல்லை | TVK Vijay | Seeman | NTK Maanadu
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | இலங்கை bowling எப்படி இருக்கு? | T20 World Cup Review | #SLvsENG
தினமணி வீடியோ செய்தி...

#t20 | இலங்கை Batting எப்படி இருக்கு? | T20 World Cup2026 Review | #SLvsENG |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

