2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

சிக்ஸர் மழை பொழிந்த ரோஹித் சர்மா; ஆஸி.க்கு 206 ரன்கள் இலக்கு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாவின் அதிரடியான ஆட்டத்தால் 205 ரன்கள் குவித்துள்ளது.

News image
ரோஹித் சர்மா- படம் | AP
Updated On :24 ஜூன் 2024, 4:29 pm

DIN

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாவின் அதிரடியான ஆட்டத்தால் 205 ரன்கள் குவித்துள்ளது.

டி20 உலகக் கோப்பைத் தொடரின் சூப்பர் சுற்றின் இன்றையப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் பேட் செய்தது.

இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி களமிறங்கினர். விராட் கோலி டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். அதன்பின், கேப்டன் ரோஹித் சர்மாவுடன் ரிஷப் பந்த் ஜோடி சேர்ந்தார். தொடக்கம் முதலே ரோஹித் சர்மா தனது அதிரடியான ஆட்டத்தினால் மிரட்டினார். ஆஸ்திரேலிய அணியின் வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கின் ஓரே ஒவரில் 3 சிக்ஸர்களை பறக்கவிட்டு அசத்தினார். அதிரடியாக விளையாடிய கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு உறுதுணையாக ரிஷப் பந்த் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருப்பினும், அவர் 15 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதன்பின் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் தனது வழக்கமான அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ரசிகர்களை சிக்ஸர் மழையில் நனைய வைத்த கேப்டன் ரோஹித் சர்மா 41 பந்துகளில் 92 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் அடங்கும். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவ் 16 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். ஷிவம் துபே 22 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து ஸ்டாய்னிஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய ஹார்திக் பாண்டியா அதிரடியாக விளையாடி அணியின் ரன்களை உயர்த்தினார். ஸ்டாய்னிஸ் ஓவரில் தொடர்ச்சியாக இரண்டு சிக்ஸர்களை விளாசி அசத்தினார்.

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் எடுத்துள்ளது. ஹார்திக் பாண்டியா 27 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 9 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் மிட்செல் ஸ்டார்க் மற்றும் மார்கஸ் ஸ்டாய்னிஸ் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஜோஸ் ஹேசில்வுட் ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.

206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி களமிறங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.