நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

கிறிஸ் ஜோர்டான், அடில் ரஷித் அபார பந்துவீச்சு; 115 ரன்களுக்கு ஆட்டமிழந்த அமெரிக்கா!

இங்கிலாந்துக்கு எதிரான சூப்பர் 8 போட்டியில் முதலில் பேட் செய்த அமெரிக்கா 115 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

News image
- படம் | AP
Updated On :23 ஜூன் 2024, 4:10 pm

DIN

இங்கிலாந்துக்கு எதிரான சூப்பர் 8 போட்டியில் முதலில் பேட் செய்த அமெரிக்கா 115 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

சூப்பர் 8 சுற்றின் இன்றையப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, அமெரிக்கா முதலில் பேட் செய்தது.

அந்த அணி 18.5 ஓவர்களில் 115 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக நிதீஷ் குமார் 30 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, கோரி ஆண்டர்சன் அதிகபட்சமாக 29 ரன்களும், ஹர்மித் சிங் 21 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

Story image

இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் ஜோர்டான் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அடில் ரஷித் மற்றும் சாம் கரண் தலா 2 விக்கெட்டுகளையும், ரீஸ் டாப்ளே மற்றும் லியம் லிவிங்ஸ்டன் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி களமிறங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.