நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

கிறிஸ் கெயிலின் சாதனையை முறியடித்து உலகக் கோப்பையில் நிக்கோலஸ் பூரன் புதிய சாதனை!

டி20 உலகக் கோப்பைத் தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் நிக்கோலஸ் பூரன் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

News image
நிக்கோலஸ் பூரன்- படம் | AP
Updated On :22 ஜூன் 2024, 2:57 pm

DIN

டி20 உலகக் கோப்பைத் தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் நிக்கோலஸ் பூரன் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

டி20 உலகக் கோப்பைத் தொடரின் சூப்பர் 8 சுற்றில் முதல் போட்டியில் தோல்வியைத் தழுவிய மேற்கிந்தியத் தீவுகள், அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம், அரையிறுதிக்கு தகுதி பெறுவதற்கான போட்டியிலும் மேற்கிந்தியத் தீவுகள் தொடர்கிறது.

அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் வீரர்களான ஷாய் ஹோப் மற்றும் நிக்கோலஸ் பூரன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிரடியாக விளையாடிய ஷாய் ஹோப் 82 ரன்கள் எடுத்தும், நிக்கோலஸ் பூரன் 27 ரன்கள் எடுத்தும் கடைசி வரை களத்தில் இருந்தனர்.

இந்தப் போட்டிக்குப் பிறகு நிக்கோலஸ் பூரன் டி20 உலகக் கோப்பைத் தொடர்களில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். டி20 உலகக் கோப்பைத் தொடர் ஒன்றில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் மட்டும் அவர் 17 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். இதற்கு முன்னதாக கடந்த 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பைத் தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் கிறிஸ் கெயில் 16 சிக்ஸர்கள் விளாசியதே, டி20 உலகக் கோப்பைத் தொடர் ஒன்றில் தனிநபர் ஒருவரால் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்ஸர்களாக இருந்தது. கிறிஸ் கெயிலின் இந்த சாதனையை தற்போது நிக்கோலஸ் பூரன் முறியடித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பைத் தொடர் ஒன்றில் தனிநபர் ஒருவரால் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்ஸர்கள்

நிக்கோலஸ் பூரன் - 17 சிக்ஸர்கள் (2024)

கிறிஸ் கெயில் - 16 சிக்ஸர்கள் (2012)

மார்லன் சாமுவேல்ஸ் - 15 சிக்ஸர்கள் (2012)

ஷேன் வாட்சன் - 15 சிக்ஸர்கள் (2012)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.