இந்தியா அபார பந்துவீச்சு; 96 ரன்களுக்கு ஆட்டமிழந்த அயர்லாந்து!
இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அயர்லாந்து அணி 96 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.


இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அயர்லாந்து அணி 96 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
டி20 உலகக் கோப்பைத் தொடரில் நியூயார்க்கில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, அயர்லாந்து முதலில் பேட் செய்தது.
அந்த அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க ஆட்டக்காரர்களான ஆண்ட்ரூ பல்பிர்னி மற்றும் கேப்டன் பால் ஸ்டிரிலிங்கின் விக்கெட்டினைக் கைப்பற்றி அசத்தினார் அர்ஷ்தீப் சிங். பல்பிர்னி 5 ரன்கள் மற்றும் பால் ஸ்டிரிலிங் 2 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அவர்களைத் தொடர்ந்து, லோர்கான் டக்கர் (10 ரன்கள்), ஹாரி டெக்டார் (4 ரன்கள்), கர்டிஸ் காம்ஃபர் (12 ரன்கள்), ஜார்ஜ் டாக்ரெல் (3 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதிக்கட்டத்தில் கேரெத் டெலானி 14 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து அயர்லாந்தின் ஸ்கோரை ஓரளவுக்கு அதிகரிக்கச் செய்தார்.
இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 16 ஓவர்களில் அயர்லாந்து அணி 96 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியின் தரப்பில் ஹார்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அர்ஷ்தீப் சிங் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா தலா 2 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் மற்றும் அக்ஷர் படேல் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
97 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...