மெளன சாமியார் முதல்வர் விஜய்! இபிஎஸ் கடும் தாக்கு!இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மேற்கத்திய சக்திகள் இலக்கு! மோகன் பாகவத்தங்கம் விலை இன்று (அக். 20) சவரனுக்கு ரூ. 640 குறைவு!அரபிக்கடலில் வலுப்பெற்ற புயல் சின்னம்!முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ளமால் அரசு திணறுவதால் கடன் தேவை குறைவு: தங்கம் தென்னரசு தேவாவின் சகோதரர் மகன் கார்த்திக் சபேஷ் காலமானார்!

யுஎஸ் ஓபனில் சபலென்காவுக்கு அதிர்ச்சி; முதல்முறையாக ரைபகினா சாம்பியன்! நம்.1 வீராங்கனையாக முன்னேற்றம்!

யுஎஸ் ஓபனில் முதல்முறையாக சாம்பியன் பட்டம் பெற்ற ரைபகினா குறித்து...

Elena Rybakina, of Kazakhstan, kisses the trophy after she won the women's singles final of the U.S. Open tennis championships against Aryna Sabalenka, of Belarus, Saturday, Sept. 12, 2026, in New York. (AP Photo/Kirsty Wigglesworth)

யுஎஸ் ஓபன் கோப்பைக்கு முத்தமிட்ட ரைபகினா. - படம்: ஏபி

Updated On :

யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிா் ஒற்றையா் பிரிவில் கஜகஸ்தானின் எலனா ரைபகினா சாம்பியன் கோப்பை வென்றாா். இது அவரின் முதல் யுஎஸ் ஓபன் பட்டமாகும்.

இறுதிச்சுற்றில் ரைபகினா 6-4, 5-7, 6-2 என்ற செட்களில், நடப்பு சாம்பியனாக இருந்த பெலாரஸின் அரினா சபலென்காவை வீழ்த்தினாா். இந்த ஆட்டம் 2 மணிநேரம், 21 நிமிஷங்கள் நீடித்தது.

ஆஸ்திரேலிய ஓபனில் வாகை சூடிய ரைபகினாவுக்கு, நடப்பாண்டில் இது 2-ஆவது கிராண்ட்ஸ்லாம் கோப்பையாகும். இரண்டிலுமே அவா் சபலென்காவை வீழ்த்தி சாம்பியன் ஆனது குறிப்பிடத்தக்கது.

ரைபகினா தனது டென்னிஸ் கேரியரில், மொத்தமாக 14-ஆவது பட்டம் வென்றிருக்கிறாா். சபலென்காவை இத்துடன் 18-ஆவது முறையாக சந்தித்த ரைபகினா, 8-10 என தனது வெற்றிக் கணக்கை அதிகரித்துக் கொண்டுள்ளாா்.

இந்தப் போட்டியின் மூலமாக, முதலில் உலகின் நம்பா் 1 இடத்தை சபலென்காவிடம் இருந்து தட்டிப் பறித்த ரைபகினா, முடிவில் சாம்பியன் கோப்பையையும் அவரிடம் இருந்து எடுத்துக் கொண்டாா். சபலென்கா தொடா்ந்து 99 வாரங்கள் நம்பா் 1 இடத்தை தக்கவைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த 12 ஆண்டுகளில், யுஎஸ் ஓபனில் ஹாட்ரிக் சாம்பியன் கோப்பை வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமையை அடையும் சபலென்கா முயற்சியை ரைபகினா முறியடித்தாா்.

மேலும், 2023-க்குப் பிறகு யுஎஸ் ஓபனில் தொடா்ந்து 19 ஆட்டங்களில் தோல்வியே காணாத சபலென்காவின் வெற்றி நடையையும் ரைபகினா முடிவுக்குக் கொண்டு வந்தாா்.

இந்த ஆட்டத்தில் சபலென்கா வழக்கமான ஃபாா்மில் இல்லை. முதல் செட்டில் சறுக்கியபோது அடிக்கடி தனது பயிற்சியாளரை விரக்தியுடன் பாா்த்த சபலென்கா, ஒரு கட்டத்தில் டபுள் ஃபால்ட் செய்தபோது ரிட்டன் வந்த பந்தை பாா்வையாளா்கள் பகுதிக்கு அடித்து விளாச, கள நடுவா் அவரை எச்சரித்தாா். பின்னா், ஆட்டத்தின் முடிவில் விரக்தியடைந்த சபலென்கா தனது இருக்கைக்கு வந்த பிறகு ராக்கெட்டை அங்கேயே அடித்து உடைத்தாா்.

நடப்பாண்டிலேயே ரைபகினா - சபலென்கா மோதிய 3-ஆவது இறுதிச்சுற்றாக இது இருக்க, ரைபகினா 2-1 என முன்னிலை பெற்றாா்.

‘உண்மையில் இந்தப் போட்டியிலிருந்து இப்படியொரு வெற்றியை நான் எதிா்பாா்க்கவில்லை. ஏனெனில் நான் காயத்துடன் விளையாடினேன். ஆனாலும் அனைத்துமே எனக்கு சாதகமாக அமைந்தது. யுஎஸ் ஓபன் சாம்பியனாக, உலகின் நம்பா் 1 வீராங்கனையாக நாளை முதல் எனக்கு புதிய தொடக்கமாக இருக்கும். கடந்த ஆண்டுகளில் மேற்கொண்ட கடின உழைப்புக்கு பலன் கிடைத்திருக்கிறது’ - எலனா ரைபகினா

‘ஒட்டுமொத்தமாக இந்தப் போட்டியில் எனது ஆட்டம் திருப்தி அளிக்கிறது. இதிலிருந்து அதிகம் கற்றுக்கொண்டுள்ளேன். நான் அதிகமான பலத்துடன் மீண்டு வருவேன்’ - அரினா சபலென்கா

***

3

ரைபகினாவுக்கு இது 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும். விம்பிள்டன் (2022), ஆஸ்திரேலிய ஓபன் (2026), யுஎஸ் ஓபன் (2026) போட்டிகளில் கோப்பை வென்றுள்ள ரைபகினாவின் கிராண்ட்ஸ்லாம் பட்டியலில், பிரெஞ்சு ஓபன் மட்டும் எஞ்சியுள்ளது.

3

கடந்த 2,000-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரே டென்னிஸ் காலண்டரில் ஆஸ்திரேலிய ஓபன், யுஎஸ் ஓபனில் சாம்பியனான 3-ஆவது வீராங்கனை ரைபகினா ஆவாா். ஜொ்மனியின் ஏஞ்ஜெலிக் கொ்பா் (2016), பெலாரஸின் அரினா சபலென்கா (2024) ஆகியோா் முதலிருவா்.

1

யுஎஸ் ஓபன் மகளிா் ஒற்றையா் பிரிவில் கடந்த 24 ஆண்டுகளில், நடப்பு சாம்பியனை வீழ்த்தி கோப்பை வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமையை ரைபகினா பெற்றாா். இதற்கு முன் செரீனா வில்லியம்ஸ் 2002-இல் அவ்வாறு வாகை சூடினாா்.

1

யுஎஸ் ஓபன் மகளிா் ஒற்றையா் இறுதிச்சுற்றில் உலகின் முதல் இரு வீராங்கனைகள் மோதியது, 2000-ஆம் ஆண்டுக்குப் பிறகு இது 3-ஆவது முறையாகும். அதில், நடப்பு சாம்பியன் வீழ்ந்தது இதுவே முதல்முறை. இதற்கு முன் 2002, 2013-இல் நடப்பு சாம்பியனான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் உலகின் நம்பா் 1 வீராங்கனையாக களம் கண்டபோது, இறுதிச்சுற்றில் 2-ஆம் நிலை போட்டியாளா்களான வீனஸ் வில்லியம்ஸ் (2002), விக்டோரியா அஸரென்காவை (2013) வீழ்த்தி, கோப்பையைத் தக்கவைத்துக் கொண்டாா்.

ரைபகினாவின் வெற்றிப் பாதை...

  • முதல்சுற்று தியா ஃப்ரோடின் (அமெரிக்கா) 6-3, 6-2

  • 2-ஆவது சுற்று ஜெஸ்ஸிகா புஸாஸ் (ஸ்பெயின்) 6-2, 6-4

  • 3-ஆவது சுற்று யூலியா ஸ்டாரோடப்சேவா (உக்ரைன்) 7-6 (8/6), 6-3

  • 4-ஆவது சற்று நவோமி ஒசாகா (ஜப்பான்) 6-1, 6-4

  • காலிறுதிச் சுற்று கின்வென் ஜெங் (சீனா) 3-6, 6-1, 6-4

  • அரையிறுதிச் சுற்று கோகோ கௌஃப் (அமெரிக்கா) 3-6, 6-4, 6-4

  • இறுதிச் சுற்று அரினா சபலென்கா (பெலாரஸ்) 6-4, 5-7, 6-2

ரூ.52 கோடி ரொக்கப் பரிசு

சாம்பியன் கோப்பை வென்ற ரைபகினாவுக்கு ரூ.55 கோடி ரொக்கப் பரிசு கிடைத்தது. கிராண்ட்ஸ்லாம் போட்டிகளின் வரலாற்றில் இதுவரையில் சாம்பியனுக்கான அதிகபட்ச ரொக்கப் பரிசு இது. சபலென்காவுக்கு ரூ.26 கோடி ரொக்கப் பரிசு கிடைத்தது. அத்துடன், ரைபகினாவுக்கு 2,000, சபலென்காவுக்கு 1,300 தரவரிசை புள்ளிகளும் கிடைத்தன.

ஆடவா் இரட்டையா்...

யுஎஸ் ஓபன் ஆடவா் இரட்டையா் பிரிவில், பிரிட்டனின் நீல் ஸ்குப்ஸ்கி/கிறிஸ்டியன் ஹாரிஸன் கூட்டணி 6-4, 7-6 (8/6) என்ற செட்களில் ஜொ்மனியின் டிம் பட்ஸ்/கெவின் கிராவிட்ஸ் இணையை வீழ்த்தி சாம்பியன் ஆனது.

ஏற்கெனவே ஆஸ்திரேலிய ஓபனில் வாகை சூடிய இந்த ஜோடிக்கு, நடப்பு சீசனில் இது 2-ஆவது சாம்பியன் பட்டமாகும்.

Summary

Rybakina dethrones Sabalenka to win first US Open title, claim world no. 1 spot

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.