சென்னை விமான நிலையத்தில் வீரமணியின் மகள் தடுத்து நிறுத்தம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் சரிந்து ரூ. 94.93ஆக நிறைவு!தொடரும் சரிவு! 4வது நாளாக வீழ்ச்சியுடன் முடிந்த சென்செக்ஸ், நிஃப்டி!!தமிழக பாட்மின்டன் வீராங்கனை துளசிமதிக்கு இரட்டை வெள்ளி!

இறுதிப் போட்டியில் மோதிய 2 இந்தியர்கள்..! தங்கம், வெள்ளிப் பதக்கம் கிடைத்தது!

ஆசிய பாரா விளையாட்டில் தங்கம் வென்ற பாட்மின்டன் வீரர் நிதீஷ் குமார் குறித்து...

Indians who won gold and silver medals

தங்கம், வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியர்கள் - படங்கள்: எக்ஸ் / சாய் மீடியா

Updated On :

ஆசிய பாரா விளையாட்டில் ஆடவருக்கான எஸ்எல்3 பாட்மின்டன் போட்டியில் இந்திய வீரர் நிதீஷ் குமார் தங்கம் வென்று அசத்தியுள்ளார். இத்துடன் இந்தியாவுக்கு 26 தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.

ஜப்பானின் அயிச்சி நகோயாவில் ஆசிய பாரா போட்டிகள் கடந்த அக்.18ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கோலாகலமாகத் தொடங்கின. இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

ஆடவருக்கான எஸ்எல்3 பாட்மின்டன் போட்டியில் இந்திய வீரர் நிதீஷ் குமார் 21-18, 21-16 என்ற கேம்களில் சக இந்தியரான பரமோத் பாகத்தை வீழ்த்தினார். இதன்மூலம் தங்கமும் வெள்ளியும் இந்தியாவுக்கே கிடைத்துள்ளன.

முன்னதாக தமிழக வீரர் நவீன் சிவக்குமார் ஆடவர் ஒற்றையர் எஸ்எல்4 பிரிவில் தங்கம் வென்றிருந்தார். மகளிர் பிரிவில் தமிழக வீராங்கனை துளசிமதி வெள்ளி வென்றிருந்தார்.

இந்த நிலையில், பாட்மின்டன் போட்டியில் மேலும் இரண்டு பதக்கங்கள் கிடைத்துள்ளன. இத்துடன் இந்தியாவுக்கு 26 தங்கப் பதக்கம் கிடைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இன்று ஒரே நாளில் இந்தியாவுக்கு இது ஐந்தாவது தங்கம் என்பதும் நினைவுகூரத்தக்கது. ஈட்டி எறிதல், தடகளம், வில்வித்தையில் இன்று தங்கப் பதக்கம் கிடைத்துள்ளன.

Summary

Nitesh Kumar wins SL3 badminton gold 2 Indians clashed in the finals..! They won gold and silver medals

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.