மெளன சாமியார் முதல்வர் விஜய்! இபிஎஸ் கடும் தாக்கு!இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மேற்கத்திய சக்திகள் இலக்கு! மோகன் பாகவத்தங்கம் விலை இன்று (அக். 20) சவரனுக்கு ரூ. 640 குறைவு!அரபிக்கடலில் வலுப்பெற்ற புயல் சின்னம்!முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ளமால் அரசு திணறுவதால் கடன் தேவை குறைவு: தங்கம் தென்னரசு தேவாவின் சகோதரர் மகன் கார்த்திக் சபேஷ் காலமானார்!

ரிகர்வ் வில்வித்தையில் இந்தியாவுக்கு முதல் தங்கம்..! 17 வயது வீராங்கனை வரலாற்றுச் சாதனை!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் முதல்முறையாக இந்தியாவுக்கு ரிகர்வ் வில்வித்தையில் தங்கம் கிடைத்துள்ளது குறித்து...

Kumkum Anil Mohod

கும்கும் அனில் மோஹோத் - படம்: எக்ஸ்/ ஒலிம்பிக் கேல்

Updated On :

ஆசிய விளையாட்டுப் போட்டியில் முதல்முறையாக ரிகர்வ் வில்வித்தையில் இந்தியாவுக்கு தங்கம் கிடைத்துள்ளது. 17 வயதான வீராங்கனை கும்கும் அனில் இதனைப் பெற்றுத்தந்து வரலாற்றுச் சாதனையில் இடம் பிடித்துள்ளார்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 ஜப்பானின் அய்ச்சி - நகோயா பகுதியில் செப். 19 ஆம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

மகளிருக்கான தனிநபர் ரிகர்வ் வில்வித்தையில் இந்திய வீராங்கனை கும்கும் அனில் மோஹோத் தென்கொரியாவின் ஹோ யே-ஜின் என்பவருடன் இறுதிப் போட்டியில் மோதினார்.

இந்தப் போட்டியில் இந்திய வீராங்கனை 27-29, 29-29, 30-29, 27-28, 30-28 என ஐந்து செட்களில் அசத்திய கும்கும் அனில் மோஹோத் பின்னர் ஷூட் அவுட்டில் 10-8 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வென்றார்.

ஆசிய விளையாட்டில் முதல்முறையாக இந்தியாவுக்கு மகளிர் பிரிவில் தங்கம் கிடைத்துள்ளது. இத்துடன் இந்தியாவுக்கு 77 பதக்கங்கள் கிடைத்துள்ளன.

மொத்தமாக 17 தங்கம், 25 வெள்ளி, 35 வெண்கலப் பதக்கங்கள் அடங்கும். தரவரிசையில் இந்தியா ஐந்தாம் இடத்தில் நீடிக்கிறது.

யார் இந்த கும்கும் அனில் மோஹோத்?

மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த கும்கும் அனில் மோஹோத் 2018 முதல் வில்வித்தையில் தனது பயணத்தை தொடங்கினார். அவரது தாய் ரூபாலிதான் இவருக்கு இந்த ஆர்வத்தை ஊட்டினார்.

தனது உறவினர் ஒருவரது மகள் இந்தப் போட்டியில் பயிற்சி செய்வதைப் பார்த்த ரூபாலி தனது மகளையும் அருகில் உள்ள பிராஃபில் டென்கே ராதே ஆர்சரி அகாதெமியில் சேர்த்துள்ளார்.

சிறுமியின் திறமை அறிந்துகொண்ட பயிற்சியாளர் டென்கே இவருக்கு சிறப்புப் பயிற்சி அளித்து வந்துள்ளார். கும்கும் அனில் மோஹோத்தின் முதல் வில் அம்பு ரூ. 3,000 மதிப்பில் மரத்தினால் செய்யப்பட்டது. இதனை வாங்க அவரது பாட்டிதான் பணம் கொடுத்து உதவியுள்ளார். 6 மாதங்களில் ஜூனியர் தேசிய சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்று ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

Summary

The 17-year-old Kumkum Anil Mohod creates history by winning India’s first-ever Asian Games gold in the women’s individual recurve event

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.