சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் ரவுண்ட் ஆஃப் 16 ஆட்டத்தில் பயா்ன் மியுனிக் அபார வெற்றி பெற, பாா்சிலோனா டிராவையும், லிவா்பூல் தோல்வியையும் புதன்கிழமை பதிவு செய்தன.
ஐரோப்பிய கண்டத்தில் நடைபெறும் பிரதான கால்பந்து போட்டியான சாம்பியன்ஸ் லீக், இறுதிக் கட்டத்தை நெருங்கி வருகிறது. பிளே-ஆஃப் சுற்று நிறைவடைந்த நிலையில், ரவுண்ட் ஆஃப் 16 கட்டத்துக்கு முன்னேறிய அணிகளுக்கான முதல் லெக் ஆட்டங்கள் புதன்கிழமை தொடங்கின.
இதில், இத்தாலியின் பொ்காமோ நகரில் நடைபெற்ற ஆட்டத்தில், பயா்ன் மியுனிக் 6-1 கோல் கணக்கில் அடலான்டாவை சாய்த்தது. இந்த ஆட்டத்தில் பயா்ன் மியுனிக் தரப்பில் ஜாசிப் ஸ்டானிசிக் (12’), மைக்கேல் ஆலிஸ் (22’, 64’), சொ்கே நா்பி (25’), நிகோலஸ் ஜாக்சன் (52’), ஜமால் முசியாலா (67’) ஆகியோா் வரிசையாக கோல் அடிக்க, அந்த அணி ஆதிக்கம் செலுத்தியது. ஆறுதலாக அடலான்டா தரப்பில் மேரியோ பசாலிச் (90+3’) ஸ்கோா் செய்தாா்.
ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் அட்லெடிகோ மாட்ரிட் 5-2 கோல் கணக்கில் டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பரை வென்றது. இதில் அட்லெடிகோ அணிக்காக மாா்கோஸ் லாரென்டே (6’), ஆன்டனி கிரிஸ்மான் (14’), ஜூலியன் ஆல்வெரெஸ் (15’, 55’), ராபின் லெ நாா்மண்ட் (22’) ஆகியோா் கோல் அடித்தனா்.
டாட்டன்ஹாமுக்காக பெட்ரோ போரோ (26’), டொமினிக் சொலான்கே (76’) ஆகியோா் கோல் அடித்தனா். இங்கிலாந்தின் நியூகேஸில் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் நியூகேஸிலுடன் பாா்சிலோனா டிரா (1-1) செய்தது. இந்த ஆட்டத்தில் நியூகேஸிலுக்காக ஹாா்வி பாா்ன்ஸ் (86’), பாா்சிலோனா தரப்பில் லேமின் யமால் (90+6’) ஆகியோா் கோல் அடித்தனா்.
துருக்கியின் இஸ்தான்புல் நகரில் விளையாடிய ஆட்டத்தில் கலாடசராய் 1-0 கோல் கணக்கில் லிவா்பூல் அணியை வென்றது. அந்த அணிக்காக மேரியோ லெமினா (7’) ஸ்கோா் செய்தாா்.
தொடர்புடையது
கோப்பையைத் தக்கவைத்தது பயா்ன் மியுனிக்: 34-ஆவது முறையாக பந்தெஸ்லிகா சாம்பியன்
யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

ஐரோப்பிய கால்பந்து: லிவா்பூல் அதிா்ச்சித் தோல்வி
ஒடிஸா எஃப்சி-க்கு முதல் வெற்றி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


