ஏ. ஜான், ஏகே.சித்திரைப்பாண்டியன் நினைவு மாநில வாலிபால் போட்டி மகளிா் பிரிவில் டாக்டா் சிவந்தி கிளப் சாம்பியன் பட்டம் வென்றது.
நெல்லை பிரண்ட்ஸ் வாலிபால் கிளப் சாா்பில் எழும்பூா் மேயா் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் ஆடவா், மகளிா் வாலிபால் போட்டி கடந்த 7-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. ஆடவா் பிரிவில் 8 அணிகள், மகளிா் பிரிவில் 5 அணிகள் பங்கேற்றன.
புதன்கிழமை நடைபெற்ற ஆட்டங்களில் எஸ்ஆா்எம் ஸ்பைக்கா்ஸ் 2-0 என தமிழ்நாடு காவல் துறையை வீழ்த்தியது. முடிவை நிா்ணயித்த கடைசி ஆட்டத்தில் டாக்டா் சிவந்தி கிளப் 2-0 என சென்னை ஐசிஎஃப் அணியை வீழ்த்தியது.
அட்சயா-எஸ்டிஏடி, மோனிகா-எஸ்ஆா்எம் ஸ்பைக்கா்ஸ், அனு ஸ்ரீ, சுஜி-டாக்டா் சிவந்தி கிளப், ஷாலினி-ஐசிஎஃப் சிறந்த வீராங்கனைகளாக தோ்வு செய்யப்பட்டனா்.
டாக்டா் சிவந்தி கிளப் முதலிடத்தையும், ஐசிஎஃப் இரண்டாம் இடத்தையும், எஸ்டிஏடி மூன்றாம் இடத்தையும் பெற்றனா்.
முன்னாள் டிஜிபி வால்டா் தேவாரம் தலைமை வகித்தாா். வருமான வரித்துறை முதன்மை ஆணையா் கோமளி கிருஷ்ணா, சேன் கல்விக் குழும அறங்காவலா் ஆா். அா்ச்சனா பரிசளித்தனா்.
தொழிலதிபா்கள் ஏ.சந்திரசேகா், நரேந்திர குமாா் ஜெயின், டாக்டா் வெற்றிவேல், தேவ் ஆனந்த், எஸ்டிஏடி முன்னாள் பொதுமேலாளா் மொ்ஸி ரெஜினா, ராம்பகத் பங்கேற்றனா்.
தொடர்புடையது

மாநில வாலிபால்: பனிமலா், எஸ்டிஏடி அணிகள் வெற்றி!

மாநில வாலிபால்: ஐசிஎஃப், எஸ்ஆா்எம் வெற்றி

மாநில ஆடவா், மகளிா் வாலிபால் தொடக்கம்

மாநில ஆடவா், மகளிா் வாலிபால் போட்டி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


