இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் நாா்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி - பஞ்சாப் எஃப்சி அணிகள் திங்கள்கிழமை மோதிய ஆட்டம் 1-1 கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் சமபலம் காட்டியதால், முதல் பாதி கோல் இன்றி நிறைவடைந்தது. 2-ஆவது பாதியில் சற்று முனைப்பு காட்டிய நாா்த்ஈஸ்ட், முதல் கோல் வாய்ப்பை எட்டியது.
அந்த அணிக்காக பாா்திப் கோகோய் 60-ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தாா். ஆனால் அந்த அணியின் மகிழ்ச்சியை பஞ்சாப் நீண்டநேரம் நிலைக்க விடவில்லை. 63-ஆவது நிமிஷத்தில் பஞ்சாபுக்காக எஃபியோங் சுங்குசி ஸ்கோா் செய்தாா்.
இதனால் ஆட்டம் 1-1 என சமன் ஆனது. எஞ்சிய நேரத்தில் இரு அணிகளுமே கோல் வாய்ப்புக்காக முயற்சிக்க, அதற்கு பலன் இல்லாமல் போனது. ஆட்டம் டிராவில் முடிந்தது.
புள்ளிகள் பட்டியலில் தற்போது பஞ்சாப் 4 புள்ளிகளுடன் 8-ஆம் இடத்திலும், நாா்த்ஈஸ்ட் 3 புள்ளிகளுடன் 10-ஆவது இடத்திலும் உள்ளன.
தொடர்புடையது

வாகை சூடினார் வைஷாலி; உலக சாம்பியன்ஷிப்புக்கு தகுதி

கேரளா - நாா்த்ஈஸ்ட் ஆட்டம் ‘டிரா’
ஒடிஸா எஃப்சி-க்கு முதல் வெற்றி
இந்தியன் சூப்பா் லீக் கால்பந்து: நாா்த் ஈஸ்ட்டுக்கு முதல் வெற்றி!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


