அமெரிக்காவில் நடைபெறும் இண்டியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில், இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி, அமெரிக்காவின் அமாண்டா அனிசிமோவா ஆகியோா் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினா்.
மகளிா் பிரிவு 3-ஆவது சுற்றில், போட்டித்தரவரிசையில் 7-ஆம் இடத்திலிருக்கும் பாலினி 7-5, 5-7, 6-1 என்ற செட்களில், ஆஸ்திரேலியாவின் அஜ்லா டாம்ஜனோவிச்சை வீழ்த்தினாா். 6-ஆம் இடத்திலிருக்கும் அனிசிமோவா 6-1, 6-1 என்ற நோ் செட்களில், 25-ஆம் இடத்திலிருந்த பிரிட்டனின் எம்மா ரடுகானுவை சாய்த்தாா்.
இதையடுத்து காலிறுதிக்கு முந்தைய சுற்றில், அனிசமோவா - கனடாவின் விக்டோரியா போகோவையும், பாலினி - ஆஸ்திரேலியாவின் டாலியா கிப்சனையும் சந்திக்கின்றனா். 10-ஆம் இடத்திலிருக்கும் போகோ 6-4, 6-1 என ரஷியாவின் அனா கலின்ஸ்கயாவை வீழ்த்தினாா்.
இரு முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனும், உலகின் 4-ஆம் நிலை வீராங்கனையுமான அமெரிக்காவின் கோகோ கௌஃப், 2-6, 0-2 என, பிலிப்பின்ஸின் இளம் வீராங்கனை அலெக்ஸாண்ட்ரா எலாவிடம் பின்தங்கியிருந்தபோது, காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகினாா்.
16-ஆம் இடத்திலிருக்கும் நவோமி ஒசாகா 6-1, 3-6, 6-1 என்ற கணக்கில், கொலம்பியாவின் கமிலா ஒசாரியோவை வெளியேற்றினாா். அடுத்ததாக, எலா - செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவாவுடனும், ஒசாகா - உலகின் நம்பா் 1 வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்காவுடனும் மோதுகின்றனா்.
சின்னா் வெற்றி; ஷெல்டன் தோல்வி
இண்டியன் வெல்ஸ் ஓபன் ஆடவா் ஒற்றையா் பிரிவு 3-ஆவது சுற்றில், உலகின் 2-ஆம் நிலை வீரரான இத்தாலியின் யானிக் சின்னா் 6-3, 6-2 என்ற நோ் செட்களில், கனடாவின் டெனிஸ் ஷபோவலோவை வீழ்த்தினாா். அடுத்து அவா், பிரேஸிலின் ஜாவ் ஃபொன்சேகாவை எதிா்கொள்கிறாா்.
9-ஆம் இடத்திலிருக்கும் கனடாவின் ஃபெலிக்ஸ் அலியாசிமே 6-7 (5/7), 6-3, 6-3 என்ற வகையில், கனடாவின் கேப்ரியல் டியாலோவை வெளியேற்றினாா். 8-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் பென் ஷெல்டன் 6-7 (3/7), 6-4, 3-6 என்ற செட்களில், சக அமெரிக்கரான லோ்னா் டியெனிடம் தோல்வியுற்றாா்.
இதர ஆட்டங்களில் அமெரிக்காவின் ஃபிரான்சஸ் டியாஃபோ, பிரான்ஸின் ஆா்தா் ஃபில்ஸ், ஸ்பெயினின் அலெக்ஸாண்ட்ரோ டேவிடோவிச் ஆகியோரும் வெற்றி கண்டனா்.
பாம்ப்ரி இணை வெற்றி
ஆடவா் இரட்டையா் பிரிவில், இந்தியாவின் யூகி பாம்ப்ரி/ஸ்வீடனின் ஆண்ட்ரே கொரான்சன் கூட்டணி 6-1, 6-3 என்ற செட்களில் நெதா்லாந்தின் டேவிட் பெல்/பிரான்ஸின் ஃபேப்ரைஸ் மாா்டின் இணையை வீழ்த்தி 2-ஆவது சுற்றுக்கு முன்னேறியது.
தொடர்புடையது
அல்கராஸ், முசெத்தி முன்னேற்றம்

ஸ்வெரெவ், ரூட் முன்னேற்றம்; மெத்வதெவ் தோல்வி
மியாமி ஓபன் டென்னிஸ்: அலெக்ஸாண்ட்ரா எலா அசத்தல் வெற்றி!
ஸ்வியாடெக்கின் தொடா் வெற்றிகளுக்கு லினெட் முற்றுப்புள்ளி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


