பஞ்சாப் கிங்ஸ் அணியின் வீரர் ஷஷாங் சிங் மீது அவரது வீட்டின் சமையல்காரர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் அணியான பஞ்சாப் கிங்ஸ் அணியின் வீரரான ஷஷாங் சிங் மற்றும் அவரது தந்தை முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான சைலேஷ் சிங் மீது அவர்களது வீட்டின் சமையல்காரராகப் பணியாற்றியதாகக் கூறும் விபேந்திர சிங் தோமர் வழக்குப்பதிவு செய்துள்ளார்.
தன்னை உடல்ரீதியாக அடித்து துன்புறுத்தியதாகவும், தகாத வார்த்தைகளால் திட்டி தனது விருப்பத்திற்கு மாறாக வீட்டில் சிறைவைத்ததாகவும் அவர் அளித்த புகாரின் பேரில் போபாலில் உள்ள ரதிபாத் காவல் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டுள்ளது.
அவர் உடலில் காயங்கள் இருக்கும் புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுகளை ஷஷாங் சிங் நிராகரித்தார். அவர் பேசுகையில், ” அந்த நபர் சொன்னதைப் போன்று எதுவும் நடக்கவில்லை. ஜூன் 25 அன்று மாலையில் வந்து, ஜூன் 28-ல் கிளம்பிச் சென்ற ஒருவரை எப்படி பணயக்கைதியைப் போன்று சிறை வைத்ததாகச் சொல்லமுடியும்? அந்த நபர் தனக்கு எல்லா விதமான சமையலும் செய்யத் தெரியும் எனக் கூறினார். பின்னர், சரிவர சமைக்கத் தெரியாது என்பதை அவர் ஒப்புக்கொண்டார். அப்படிப்பட்ட ஒருவரை எப்படி நம்புவது?” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், சமையல்காரான அந்த நபர் மீது குற்றச்சாட்டுகளை வைத்த ஷஷாங் சிங், “அவர் எங்கள் வீட்டின் படுக்கையறைகள், விலையுயர்ந்த பொருள்கள் உள்ள தனியறை என தனிப்பட்ட பகுதிகளுக்குள் நுழைந்து அனுமதியின்றி விடியோ எடுத்து மற்றவர்களுக்கும் அனுப்பியுள்ளார். எனது தந்தையின் நண்பரின் பரிந்துரையால் வேலைக்கு வந்த அவர், வந்தவுடனே ரூ. 20,000 முன்பணம் கேட்டார். சமையல் பிடித்திருந்தால் சம்பளம் தருவதாகக் கூறியிருந்தோம். ஆனால், நடத்தை சரியில்லை என்று வேலையை விட்டுப் போகச் சொன்னதற்காக அவர் எங்களின் மீது புகாரளித்துள்ளார்” எனத் தெரிவித்தார்.
இதுபற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Summary
Case registered against Punjab team player Shashank Singh for allegedly beating and harassing his domestic cook!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பஞ்சாப் அரசுப் பள்ளிகளில் செய்யறிவு கல்வி அறிமுகம்! அமைச்சர் அறிவிப்பு

சாதி குறித்து அவதூறு பேச்சு! எஸ்சி ஆணையத்தில் மன்னிப்பு கோரிய மத்திய அமைச்சர்!

தில்லி கேபிடல்ஸின் பயிற்சியாளராகும் யுவராஜ் சிங்!

ஐபிஎல் 2026: வாழ்வா? சாவா? போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சு!
விடியோக்கள்

Vijay Vs Jason Sanjay? ஒன்றாக வெளியாகிறதா Jana nayagan & Sigma | Cinema Updates
Gatta Kusthi 2 Movie Review | Vishnu Vishal | Aishwarya Lekshmi | Dinamani Talkies

இங்கிலாந்தை மிரளவைத்த காங்கோவின் சிங்கம்! | FIFA | FIFA World Cup |





