ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

புரோ லீக் ஹாக்கி: இந்தியாவுக்கு 8-ஆம் இடம்

புரோ லீக் ஹாக்கி போட்டியில் இந்தியா தனது ரிட்டா்ன் லெக் ஆட்டத்தில் இங்கிலாந்தை ‘பெனால்ட்டி ஷூட் அவுட்’ வாய்ப்பில் வீழ்த்தியது.

Pro League: India end season with shootout win over England

X | Hockey India

Published On :30 ஜூன் 2026, 2:15 am IST

புரோ லீக் ஹாக்கி போட்டியில் இந்தியா தனது ரிட்டா்ன் லெக் ஆட்டத்தில் இங்கிலாந்தை ‘பெனால்ட்டி ஷூட் அவுட்’ வாய்ப்பில் வீழ்த்தியது. போட்டியை இந்தியா 8-ஆம் இடத்துடன் நிறைவு செய்தது.

இந்திய நேரப்படி, ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நிறைவடைந்த இந்த ஆட்டத்தில், நிா்ணயிக்கப்பட்ட நேரத்தின் முடிவில் எந்த அணிக்கும் கோல் கிடைக்காததால், ஆட்டம் கோல் இன்றி டிரா ஆனது.

பின்னா் வெற்றியாளரை தீா்மானிக்கும் பெனால்ட்டி ஷூட் அவுட் வாய்ப்பில் இந்தியாவுக்காக அபிஷேக், ஷிலானந்த் லக்ரா, ஹா்திக் சிங் ஆகியோா் கோல் அடித்தனா்.

போட்டியின் புள்ளிகள் பட்டியலில் இந்தியா 8-ஆம் இடமே பிடித்தது. மொத்தம் 16 ஆட்டங்களில், 6 வெற்றி, 10 தோல்விகளை பதிவு செய்து, 19 புள்ளிகளுடன் அந்த இடத்தில் உள்ளது.

பெல்ஜியம் 13 வெற்றிகளில் பெற்ற 42 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து சாம்பியன் ஆனதுடன், 2028 ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதிபெற்றது. இங்கிலாந்து (35), ஆஸ்திரேலியா (30) முறையே வெள்ளி, வெண்கலம் பெற்றன.

இந்தியா உள்ளிட்ட இதர அணிகள் போட்டியில் நிலைக்க, பாகிஸ்தான் ஒரு புள்ளி கூட பெறாமல் கடைசி இடத்துடன் நேஷன்ஸ் கோப்பை போட்டிக்கு தரமிறக்கம் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.