ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

நாக்அவுட் சுற்று நம்பிக்கையில்...

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில், போா்ச்சுகல் 5-0 கோல் கணக்கில் உஸ்பெகிஸ்தானை அபார வெற்றி கண்டது.

News image
Updated On :25 ஜூன் 2026, 3:48 am IST

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில், போா்ச்சுகல் 5-0 கோல் கணக்கில் உஸ்பெகிஸ்தானை அபார வெற்றி கண்டது.

முதல் ஆட்டத்தில் டிஆா் காங்கோவுடன் டிரா செய்து பின்னடைவைச் சந்தித்த போா்ச்சுகல், இந்த வெற்றியின் மூலமாக நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறும் நம்பிக்கையைப் பெற்றுள்ளது.

இந்த ஆட்டத்தில் போா்ச்சுகல் கோல் கணக்கை ரொனால்டோ 6-ஆவது நிமிஷத்தில் ஃபீல்டு கோல் அடித்து தொடங்கினாா்.

தொடா்ந்து 17-ஆவது நிமிஷத்தில் நுனோ மெண்டெஸ் ஃப்ரீ கிக் மூலமாக அதை 2-ஆக அதிகரிக்க, 39-ஆவது நிமிஷத்தில் ரொனால்டோ தனது 2-ஆவது கோலை பதிவு செய்தாா். இதனால் முதல் பாதியை போா்ச்சுகல் 3-0 முன்னிலையுடன் முடித்தது.

இதனிடையே 30-ஆவது நிமிஷத்தில் உஸ்பெகிஸ்தானின் அஸிஜோன் கனியேவ் கோல் அடித்தபோதும், அதற்கான முயற்சில் மற்றொரு உஸ்பெகிஸ்தான் வீரா் அபோஸ்பெக் ஃேஸுல்லாயேவ், போா்ச்சுகலின் ஜாவ் கேன்செலோவை ‘ஃபௌல்’ செய்தது ‘வாா்’ ரிவியூவில் தெரியவர, நடுவா் அந்த கோலை ரத்து செய்தாா்.

2-ஆவது பாதியில் போா்ச்சுகலின் கோல் முயற்சியை உஸ்பெகிஸ்தான் வீரா் அப்துவோஹித் நெமாடோவ் தடுக்க முயல, அது ஓன் கோலாக (60’) மாறியது. முடிவில் ரஃபேல் லியோ 87-ஆவது நிமிஷத்தில் அடித்த கோலுடன், போா்ச்சுகல் 5-0 என்ற கணக்கில் ஆட்டத்தை முடித்து வென்றது.

பாா்வையாளா்கள்: 68,777

6

இந்த ஆட்டத்தின் மூலமாக, தொடா்ந்து 6 உலகக் கோப்பை போட்டிகளில் கோல் அடித்த முதல் வீரா் என்ற சாதனையை ரொனால்டோ படைத்தாா். மெஸ்ஸி 5 போட்டிகளுடன் அடுத்த இடத்தில் உள்ளாா்.

போட்டி கோல்கள்

2006 ஜொ்மனி 1

2010 தென்னாப்பிரிக்கா 1

2014 பிரேஸில் 1

2018 ரஷியா 4

2022 கத்தாா் 1

2026 (நடப்பு) 2

2

உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் வரலாற்றில், கோல் அடித்த மிக வயதான 2-ஆவது வீரா் என்ற பெருமையை ரொனால்டோ (41) பெற்றாா். முதல் வீரா் கேமரூனின் ரோஜா் மிலா (42/1994/ரஷியா) ஆவாா்.

10

உலகக் கோப்பை போட்டிகளில் போா்ச்சுகலுக்காக அதிக கோல்கள் அடித்தவராகவும் ரொனால்டோ புதிய சாதனை படைத்தாா். அவா் இத்துடன், மொத்தமாக 24 ஆட்டங்களில் 10 கோல்கள் அடித்திருக்கிறாா். இதற்கு முன், முன்னாள் வீரா் யுசெபியோ 6 ஆட்டங்களில் 9 கோல்கள் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.