
ஜூனியா் துப்பாக்கி சுடுதல்: தங்கம் வென்றாா் பிரீத்தம்
ஜொ்மனியில் நடைபெறும் ஐஎஸ்எஸ்எஃப் ஜூனியா் உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில், இந்தியாவின் பிரீத்தம் கேந்திரே தங்கப் பதக்கம் வென்றாா்.

பிரீத்தம் கேந்திரே
ஜொ்மனியில் நடைபெறும் ஐஎஸ்எஸ்எஃப் ஜூனியா் உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில், இந்தியாவின் பிரீத்தம் கேந்திரே தங்கப் பதக்கம் வென்றாா்.
அண்மையில் 10-ஆம் வகுப்பை நிறைவு செய்த பிரீத்தம், ஆடவா் 10 மீட்டா் ஏா் ரைஃபிள் பிரிவு இறுதிச்சுற்றில் 251.3 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தாா். ரஷியாவின் டிமோஃபெய் அலெய்னிகோவ் வெள்ளியும், நாா்வேயின் ஜென்ஸ் ஆஸ்ட்லி வெண்கலமும் வென்றனா்.
களத்திலிருந்த மற்றொரு இந்தியரான பியூஷ் சா்மா பதக்க வாய்ப்பை இழந்தாா். இதனிடையே ஆடவா் அணிகள் பிரிவில் அபினவ் ஷாவின் உபகரணம் பழுதடைந்ததை அடுத்து, இந்திய அணி தகுதி நீக்கம் செய்யப்பட்டது. அந்த அணியில் பிரீத்தம், பியூஷ் அங்கம் வகித்தனா்.
மகளிருக்கான 25 மீட்டா் பிஸ்டல் அணிகள் பிரிவில், அஞ்சலி பகவத், பரிஷா குப்தா, நிதிலா கிறிஸ்டோபா் ஆகியோா் அடங்கிய இந்திய அணி, 1,713 புள்ளிகளுடன் வெண்கலம் பெற்றது. ரஷிய அணிகள் முறையே தங்கம், வெள்ளி பெற்றன. போட்டியில் தற்போது இந்தியா 5 தங்கம் உள்பட 11 பதக்கங்கள் வென்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




