கீர்த்தனா பெயர் ஏன் முதலில்? அமைச்சர் ஜெகதீஸ்வரி கேள்விஜூன் 26 இன்று தங்கம் வாங்கலாமா? என்ன சொல்கிறது விலை நிலவரம்?ஸ்போர்ட்ஸ எடு, டிரக்ஸ விடு! இளைஞர்களுக்கு முதல்வர் விஜய் அறிவுரை!சோழவரம் அருகே ஆம்னி பேருந்தில் தீ விபத்து!சோழவரம் அருகே ஆம்னி பேருந்தில் தீ விபத்து! பிஎஃப் பணம் எடுக்க முடியாது! இபிஎஃப்ஓ தளம் தற்காலிகமாக மூடல்!புணே இளம் தொழிலதிபர் கொலையில் திடீர் திருப்பம்!! சூப்பர் பிளான் போட்டது யார்?சென்னையில் ஜூன் 26-அன்று மின்தடை ஏற்படும் இடங்கள்!பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த ஏர் இந்தியா விமானம்! காரணம்?ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

உலகக் கோப்பையின் 1000-ஆவது போட்டி: துனிசியாவை வெளியேற்றியது ஜப்பான்!

கால்பந்து உலகக் கோப்பையின் 1000-ஆவது போட்டி குறித்து...

News image

வெற்றிக் களிப்பில் ஜப்பான் வீரர்கள். - படம்: ஏபி

Updated On :21 ஜூன் 2026, 2:12 pm IST

கால்பந்து உலகக் கோப்பையின் 1000-ஆவது போட்டியில் ஜப்பான் அணி துனிசியாவை வீழ்த்தி, உலகக் கோப்பையில் இருந்து வெளியேற்றியது.

ஆடவர் அணிகளுக்கான கால்பந்து உலகக் கோப்பை போட்டிகள் 1930 முதல் நடைபெற்று வருகின்றன. இதன் ஆயிரமாவது போட்டி இன்று இந்திய நேரப்படி 9.30 மணிக்கு நடைபெற்றது.

மெக்சிகோவின் மான்டேரி அரங்கத்தில் நடைபெற்ற போட்டியில் குரூப் எஃப் பிரிவில் இருக்கும் துனிசியா - ஜப்பான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ஜப்பான் அணியினர் 4 கோல்கள் அடித்தார்கள்.

அதில் 4ஆவது நிமிஷத்தில் டைச்சி கமடா, 31ஆவது நிமிஷத்தில் அயாசே உவேடா , 69ஆவது நிமிஷத்தில் ஜுன்யா இடோ, 83ஆவது நிமிஷத்தில் அயாசே உவேடா மீண்டும் ஒரு கோல் அடித்து அசத்தினார்கள். இறுதியில் ஜப்பான் 4-0 என வென்றது.

இந்தப் போட்டியில் தோல்வியுற்றதால் துனிசியா வெளியேறியது. ஜப்பான் அணி புள்ளிப் பட்டியலில் இரண்டாமிடம் வகிக்கிறது. நெதர்லாந்து அணி மொத்தமாக 7 கோல்கள் அடித்துள்ளதால் முதலிடத்தில் இருக்கிறது.

ஜப்பான் டாப் 2 இடத்திற்கு முன்னேற வாய்ப்பிருக்கிறது. இல்லையென்றாலும், அதிக கோல்கள் அடித்துள்ளதால் மூன்றாவது இடம் பிடித்தாலும் நாக் அவுட் சுற்றுக்குத் தேர்வாக வாய்ப்பிருக்கிறது.

ஜப்பான அணி 2019 முதல் ஐரோப்பிய அணிகளிடம் தோல்வியுற்றதே இல்லை என்ற தனது சாதனையை தக்க வைத்துள்ளது. வரும் வியாழக்கிழமை ஸ்வீடன் உடன் தனது கடைசி போட்டியில் மோதவிருக்கிறது.

Summary

Ayase Ueda scores twice in Japan's 4-0 win against Tunisia in 1,000th men's World Cup match

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.