இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகள்: மாணவர்களை ஒன்றுதிரட்டும் ராகுல் காந்தி!
/

இரண்டாம் பாதியில் கம்பேக் அளித்த தென் கொரியா த்ரில் வெற்றி!

கால்பந்து உலகக் கோப்பையின் இரண்டாவது போட்டி குறித்து...

News image

வெற்றிக் களிப்பில் தென் கொரிய வீரர்கள். - படம்: ஏபி

Updated On :12 ஜூன் 2026, 12:27 pm IST

கால்பந்து உலகக் கோப்பையின் இரண்டாவது போட்டியில் தென் கொரியா 2-1 என செக் குடியரசு அணியை வீழ்த்தியது.

நடப்பு உலகக் கோப்பை போட்டிகள் அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் நடைபெறுகின்றன. இதில் முதல் போட்டி மெக்சிகோவில் நடைபெற்றது. சொந்த மண்ணில் மெக்சிகோ வரலாற்று வெற்றி பெற்றது.

இரண்டாவது போட்டியும் மெக்சிகோவிலேயே தொடங்கியது. இதில் தென் கொரியாவும் செக் குடியரசு அணியும் மோதின. இந்தப் போட்டியில் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்காமல் தடுமாறின.

இரண்டாம் பாதியின் தொடக்கத்தில் 59ஆவது நிமிஷத்தில் செக் குடியரசு அணியின் வீரர் லாடிஸ்லாவ் கிரெஜ்சி கோல் அடித்து 1-0 என முன்னிலை வகித்தார்.

அடுத்து கம்பேக் அளித்த தென் கொரிய அணியின் வீரர் ஹ்வாங் இன்-போம் 67-ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து 1-1 என சமன்படுத்தினார். ஆட்டம் விருவிருப்படைந்தது.

பின்னர், 80ஆவது நிமிஷத்தில் தென் கொரியாவின் ஓ ஹியோன்-கியூ கோல் அடித்து 2-1 என முன்னிலை வகிக்க உதவினார். பின்னர், இறுதியில் அதே கோல்கள் வித்தியாசத்தில் வென்றது.

ஒரு கோல், ஒரு அசிஸ்ட் செய்து அசத்திய ஹ்வாங் இன்-போம் ஆட்ட நாயகன் விருது வென்றார். பெரிதும் எதிர்பார்த்த சன் பெரிதாக சோபிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Hwang In-beom sparks South Korea''s 2-1 comeback win over the Czech Republic at the World Cup

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.