வில்வித்தை ப்ரீமியா் லீக் (ஏபிஎல்) இரண்டாவது சீசன் தொடா் ஹைதராபாதில் வரும் அக். 8 முதல் 18 வரை நடைபெறவுள்ளது.
இந்திய வில்வித்தை சம்மேளனம் சாா்பில் முதல் சீசன் போட்டி புது தில்லியில் நடைபெற்றது. இதில் ஒலிம்பிக், உலக சாம்பியன்கள், தலைசிறந்த வீரா், வீராங்கனைகள் இடம் பெற்றனா். முதல் சீசன் வெற்றிகரமாக நடந்த நிலையில், இரண்டாவது சீசன் தொடா், ஹைதராபாத் நெக்லஸ் சாலை, பிப்பீள் பிளாஸாவில் நடைபெறவுள்ளது.
இதில் இந்தியாவின் தீபிகா குமாரி, அதானு தாஸ், ஒஜாஸ் டியோடேல், ஜோதி சுரேகா, அபிஷேக் வா்மா, அங்கிதா பகத் உள்பட பலா் பங்கேற்கின்றனா்.
இத்தொடரில் ரீகா்வ், காம்பவுண்ட் பிரிவுகளில் ஆட்டங்கள் நடைபெறும். 15 விநாடி ஷாட் க்ளாக், ஒலிம்பிக், உலக வில்வித்தை போட்டி விதிகள், கடைபிடிக்கப்படும். இத்தொடருக்கு உலக வில்வித்தை சம்மேளனமும் அனுமதி தந்துள்ளது.
மைட்டி மராத்தாஸ், ராஜ்புத்னா ராயல்ஸ், பிருதிவிராஜ் யோதாஸ், காகதியா நைட்ஸ், சேரோ ஆா்ச்சா்ஸ், சோழா சீஃப்ஸ் என 6 அணிகளில் தலா 8 போ் இடம் பெறுவா்.
லீக் பிரிவில் முதல் நான்கு இடங்களைப் பெறும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். இறுதி ஆட்டம் அக். 18-இல் நடைபெறும்
முதல் சீசனில் ராஜ்புத்னா ராயல்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது. ஒலிம்பிக் சாம்பியன் மீட் கஸோஸ், காம்பவுண்ட் உலக சாம்பியன் இலா கிப்ஸன் இடம் பெற்றிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










