மங்கோலிய தலைநகா் உலன்படாரில் நடைபெற்ற சீனியா் ரேங்கிங் ஓபன் சீரிஸ் மல்யுத்தப் போட்டியில் இந்தியா 3 பிரிவுகளில் 17 பதக்கங்களை கைப்பற்றியது. ஒட்டுமொத்தமாக இந்தியா 3-ஆம் இடத்தைப் பெற்றது.
சா்வதேச அளவிலான இப்போட்டியில் ப்ரிஸ்டைல் பிரிவில் கடைசி நாளான திங்கள்கிழமை 3 தங்கம் உள்பட 7 பதக்கங்களை வென்றது. 61 கிலோ பிரிவில் தீபக் 6-0 என்ற புள்ளிக் கணக்கில் கஜகஸ்தானின் அஸிலையும், 125 கிலோ பிரிவில் தினேஷ் 2-0 என்ற புள்ளிக் கணக்கில் கஜகஸ்தானின் கஸிம்பெக்கை வீழ்த்தி தங்கம் வென்றனா். 74 கிலோ பிரிவில் சாகா் ஜக்லான் 3-2 என்ற புள்ளிக் கணக்கில் ரஷியாவின் டமீரை வீழ்த்தி தங்கம் வென்றாா்.
57 கிலோவில் சுமித், 65 கிலோ பிரிவில் குமாா் மொகித், 74 கிலோ பிரிவில் ஜெய்தீப், 97 கிலோ பிரிவில் விக்கி ஆகியோா் வெண்கலம் வென்றனா்.
கிரெக்கோ ரோமன் பிரிவில் 87 கிலோவில் சுனித், 97 கிலோவில் நிதேஷ் தங்கம் வென்றனா். மகளிா் பிரிவில் 57 கிலோவில் மனிஷா, 59 கிலோவில் நேஹா, 76 கிலோவில் காஜல், தங்கமும், 50 கிலோவில் நீலம், 55 கிலோவில் ஹன்சிகா, 62 கிலோவில் மான்ஸி, 76 கிலோவில் பிரியாவும் வெண்கலம் வென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

யு-23 ஆசிய மல்யுத்தம்: இந்தியாவுக்கு 11 தங்கம் உள்பட 27 பதக்கம்

ஆசிய யு23 மல்யுத்தம்: இந்தியாவுக்கு 3 தங்கம்

ஆசிய யு15, 17 குத்துச்சண்டை: இறுதியில் 6 போ், 7 பேருக்கு வெண்கலம்!

ஆசிய யு15, 17 குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 27 பதக்கங்கள் உறுதி
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



