ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பையின் சமூக வலைதள பக்கத்தில் ’மகா யுத்தம்' என தமிழில் பதிவிடப்பட்டுள்ளது.
கால்பந்து உலகக் கோப்பைப் போட்டிகள் ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் நடைபெற இருக்கின்றன.
முதல்முறையாக இந்த உலகக் கோப்பையில் 48 அணிகள் பங்கேற்கின்றன. இதில் 891 புதிய வீரர்கள் அறிமுகமாகிறார்கள். முதல்முறையாக கேப் வெர்டே, குராகோ, ஜோர்டான், உஸ்பெகிஸ்தான் ஆகிய அணிகள் உலகக் கோப்பையில் பங்கேற்கின்றன.
இந்திய அணி இதுவரை ஃபிஃபா உலகக் கோப்பையில் தேர்வானதில்லை. ஆனால், கால்பந்துக்கென ரசிகர்கள் இருக்கிறார்கள். தமிழகத்திலும் இதற்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்.
தமிழ் ரசிகர்களைக் கவரும் வகையில் அடிக்கடி பல கால்பந்து தொடர்களின் நிறுவனங்கள் தமிழ்ப் பாடல்களை ரீல்ஸ்களாக பதிவிடுவது வழக்கமாகவே இருக்கிறது.
தற்போது, அதிகாரபூர்வமான கால்பந்து உலகக் கோப்பையின் பக்கத்திலேயே, ‘மகா யுத்தம்’ என தமிழில் பதிவிடப்பட்டுள்ளது. இதில் பிரான்ஸின் எம்பாப்பேவும் நார்வேயின் எர்லிங் ஹாலந்து புகைப்படமும் ஒப்பிடப்பட்டுள்ளது.
தமிழில் பதிவிட்ட ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை - படம்: இன்ஸ்டா / ஃபிஃபா உலகக் கோப்பை.
Summary
A grand battle... FIFA Football World Cup posts in Tamil!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

891 புதிய வீரர்களுடன் முதல்முறையாக 1,248 பேர் பங்கேற்கும் கால்பந்து உலகக் கோப்பை!

கால்பந்து உலகக் கோப்பை: 96 ஆண்டுகால வரலாற்றில் 8 அணிகள் மட்டுமே சாம்பியன்!

நட்சத்திர வீரர்கள் நிரம்பிய பிரான்ஸ் அணி..! கால்பந்து உலகக் கோப்பைக்குத் தயார்!

கால்பந்து உலகக் கோப்பை தொடக்க விழாவில் நடனமாடும் பாகுபலி பட நடிகை!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



