ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

அசைக்கமுடியாத மனோதிடம்... முதல் பதக்கம் வென்றவருக்கு மோடி புகழாரம்!

கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் முதல் பதக்கம் வென்றவருக்கு பிரதமர் மோடியின் வாழ்த்து குறித்து...

Bronze medalist Jhandu Kumarand Prime Minister Modi.

வெண்கலம் வென்ற ஜாண்டு குமார், பிரதமர் மோடி. - படங்கள்: எக்ஸ் / நரேந்திர மோடி.

Published On :25 ஜூலை 2026, 12:01 pm IST

கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் முதல் பதக்கம் வென்றவருக்கு பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் பாரா பவர்லிஃப்டிங் பிரிவில் ஜாண்டு குமார் வெண்கலம் வென்று அசத்தியுள்ளார். இந்த காமன்வெல்த் போட்டியில் இது இந்தியாவின் முதல் பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பதக்கம் குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

அற்புதமாக விளையாடிய ஜாண்டு குமார், கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் ஆடவர் பாரா பவர்லிஃபிங்டிங்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை வென்றுள்ளார்! அவருக்கு எனது வாழ்த்துகள்.

அவரது சாதனை மகத்தான வலிமை, அசைக்கமுடியாத மனோதிடம், பல ஆண்டு ஒழுக்கமாக போராடியதின் வலுவான பிரதிபலிப்பு.

ஒவ்வொரு சவாலையும் தாண்டி, சர்வதேச அரங்கில் ஜொலித்து, ஒட்டுமொத்த நாட்டையும் பெருமைப்பட வைத்து, கணக்கில்லாத இந்தியர்களை உத்வேகம் அடைய செய்துள்ளார் எனக் கூறியுள்ளார்.

Summary

Jhandu Kumar has made the entire nation proud and inspired countless Indians says PM Modi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.