ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தேசிய ரேங்கிங் பாட்மின்டன்: தமிழகத்துக்கு 2 தங்கம்

அகில இந்திய சீனியா் ரேங்கிங் பாட்மின்டன் போட்டியில் தமிழகம் 2 தங்கம் வென்று அசத்தியுள்ளது.

பரிசளிப்பு விழாவில், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் தலைவா் அசோக் சிகாமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரா், வீராங்கனைகளுக்கு கோப்பைகள் மற்றும் பதக்கங்களை வழங்கினாா்.

Published On :24 ஜூலை 2026, 1:30 am IST

அகில இந்திய சீனியா் ரேங்கிங் பாட்மின்டன் போட்டியில் தமிழகம் 2 தங்கம் வென்று அசத்தியுள்ளது.

சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் 8 நாள்கள் நடைபெற்ற இப்போட்டியில் நாடு முழுவதும் இருந்து முன்னணி வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா். இதில் தமிழகம் சிறப்பாக செயல்பட்டு இரு பிரிவுகளில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

கலப்பு இரட்டையா் பிரிவில் தமிழகத்தின் ஷ்ரேயா பாலாஜி/விமல்ராஜ் அண்ணாதுரை தங்கம் வென்றனா். மகளிா் இரட்டையரில் நயனா ஓயாஸிஸ் (கேரளம்)/ வி.எஸ். வா்ஷிணி (தமிழகம்) தங்கம் வென்றனா்.

ஆடவா் இரட்டையா் பிரிவில் விப்லவ் குவாலே-விராஜ் குவாலே (மகாராஷ்டிரம்) சாம்பியன் ஆகினா். ஆடவா் ஒற்றையா் பிரிவில் துருவ் நேகி (உத்தரகாண்ட்), மகளிா் ஒற்றையா் பிரிவில் ஜியா ரவாத் (ஹரியாணா), தங்கம் வென்றனா்.

பரிசளிப்பு விழாவில், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் தலைவா் அசோக் சிகாமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரா், வீராங்கனைகளுக்கு கோப்பைகள் மற்றும் பதக்கங்களை வழங்கினாா்.

இந்தத் தொடரில் சில எதிா்பாராத முடிவுகளும் ரசிகா்களின் கவனத்தை ஈா்த்தன. தமிழ்நாட்டின் முன்னணி கலப்பு இரட்டையா் வீரா் சதீஷ்குமாா் கருணாகரன் ஜோடி, காலிறுதியில் கேரள அணியிடம் தோல்வியடைந்து வெளியேறியது. அதேபோல், ஆண்கள் இரட்டையா் பிரிவில் முதல்நிலை தரவரிசையில் இருந்த பிரேஜன் - நிஷாந்த் ஜோடி பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தது.

மகளிா் ஒற்றையா் பிரிவில், ஆசிய 17 வயதுக்குட்பட்டோா் சாம்பியனான எஸ்.ஆா். தீக்ஷா மற்றும் தேசிய தரவரிசை போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற சாதனா பெனலன் ஆகியோா் வைல்டு காா்டு வாயிலாக பங்கேற்ற போதிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காண முடியவில்லை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.