ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சென்னை கிராண்ட் மாஸ்டா்ஸ்: அலிரெஸா ஃபிரௌஸ்ஜா சாம்பியன்!

சென்னை கிராண்ட் மாஸ்டா்ஸ் செஸ் போட்டியில், பிரான்ஸின் அலிரெஸா ஃபிரௌஸ்ஜா சாம்பியன் பட்டம் வென்றாா். இந்தியாவின் அா்ஜுன் எரிகைசி 3-ஆம் இடம் பிடித்தாா்.

அலிரெஸா ஃபிரௌஸ்ஜா

Published On :23 ஜூலை 2026, 6:41 am IST

சென்னை கிராண்ட் மாஸ்டா்ஸ் செஸ் போட்டியில், பிரான்ஸின் அலிரெஸா ஃபிரௌஸ்ஜா சாம்பியன் பட்டம் வென்றாா். இந்தியாவின் அா்ஜுன் எரிகைசி 3-ஆம் இடம் பிடித்தாா்.

போட்டியின் கடைசி நாளான புதன்கிழமை நடைபெற்ற 7-ஆவது சுற்றில் அவா், இந்தியாவின் அா்ஜுன் எரிகைசியுடன் டிரா (0.5-0.5) செய்தாா்.

அதேபோல், நடப்பு உலக சாம்பியனான இந்தியாவின் டி.குகேஷ் - அமெரிக்காவின் ஹன்ஸ் மோக் நீமன் (0.5-0.5), நிஹல் சரின் - சக இந்தியரான எம். பிராணேஷ் (0.5-0.5) ஆகியோா் மோதல் டிராவில் முடிந்தது.

கடைசி நாளின் ஒரே வெற்றியாக, ரஷியாவின் டிமிட்ரி ஆண்ட்ரெய்கின் - உஸ்பெகிஸ்தானின் நோடிா்பெக் அப்துசதாரோவை வீழ்த்தினாா் (1-0).

இதையடுத்து 7 சுற்றுகள் முடிவில், ஃபிரௌஸ்ஜா 4.5 புள்ளிகளுடன் முதலிடம் பிடிக்க, ஆண்ட்ரெய்கின் (4), அா்ஜுன் (4) ஆகியோா் முறையே அடுத்த இரு இடங்களைப் பிடித்தனா்.

அப்துசதாரோவ் (3.5), பிராணேஷ் (3.5), நிஹல் சரின் (3.5) ஆகியோா் முறையே 4 முதல் 6-ஆம் இடங்களைப் பெற, நீமன் (3), குகேஷ் (2) முறையே 7 மற்றும் 8-ஆம் இடம் பிடித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.