ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஃபிஃபா உலககோப்பை இறுதிப்போட்டி: கேரளத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியை முன்னிட்டு கேரளத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

FIFA

Published On :19 ஜூலை 2026, 1:26 pm IST

2026-ம் ஆண்டுக்கான ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா - ஸ்பெயின் மோதும் போட்டி இன்று இரவு 12.30 மணிக்கு அமெரிக்காவின் நியூஜெர்ஸி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

உலகம் முழுவதுமுள்ள கால்பந்து விளையாட்டு ரசிகர்கள் இந்தப் போட்டியைக் காண ஆவலுடன் உள்ளனர்.

இந்தியாவிலும் இத்தொடர் பரவலாக அனைத்துத் தரப்பினராலும் பார்க்கப்படுகிறது. இதில், மொத்த நாட்டிற்கும் முன்னொடியாக கேரளம் உள்ளது.

கேரளத்தில் கால்பந்து விளையாட்டைக் கொண்டாடும் அளவில் இந்தியாவில் வேறெங்கும் கொண்டாடுவதைக் காண முடியாது. பல்வேறு நாட்டு அணிகளுக்கான ரசிகர்கள் குழுக்கள், கால்பந்து வீரர்களுக்கான பல அடி உயரக் கட்-அவுட்டுகள் என கால்பந்து உலகக்கோப்பை தொடர் என்றாலே கேரளம் திருவிழாக் கோலமாகக் காட்சியளிக்கும்.

இதனைத் தொடர்ந்து, உலகக்கோப்பை கால்பந்து தொடரைச் சிறப்பிக்கும் விதமாக கேரள அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஆர்ஜென்டீனா - ஸ்பெயின் மோதும் இறுதிப்போட்டி இன்று இரவு 12.30 மணிக்கும் தொடங்கும் நிலையில், நாளை ஒருநாள் கேரளம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கி கேரள முதல்வர் சதீசன் உத்தரவிட்டுள்ளார்.

இதனால், கேரள கால்பந்து ரசிகர்கள் அனைவரும் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

Summary

FIFA World Cup Final: Holiday for schools and colleges in Kerala!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.