ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஃபாக்லாந்து தீவு எங்களுக்குச் சொந்தமானது... ஆர்ஜென்டீன வீரர்களுக்கு அபராதம்?

ஆர்ஜென்டீன வீரர்களின் கொண்டாட்டத்தினால் வெடித்த சர்சை குறித்து...

Argentina's Giovani Lo Celso holds a banner with the words "The Malvinas are Argentine", referring to the Falkland Islands, while teammate Argentina's Nicolas Otamendi gestures to him, at the end of the World Cup semifinal soccer match between England and Argentina in Atlanta, Wednesday, July 15, 2026. (AP Photo/Rebecca Blackwell)

பதாகைகளுடன் கொண்டாடிய ஆர்ஜென்டீன வீரர்கள். - படம்: ஏபி

Published On :16 ஜூலை 2026, 2:21 pm IST

இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் த்ரில் வெற்றி பெற்ற ஆர்ஜென்டீன அணியினர் ஃபாக்லாந்து தீவு எங்களுக்குச் சொந்தமானது என்ற போஸ்டருடன் கொண்டாடினர்.

அரசியல் ரீதியான போஸ்டர்களுடன் ரசிகர்கள் கொண்டாடலாம் ஆனால் வீரர்கள் கொண்டாடுவது ஃபிஃபா விதிகளின்படி குற்றம் என்பதால், அபராதம் அல்லது தண்டனை விதிக்கப்பட வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

நடப்பு சாம்பியனான ஆர்ஜென்டீனா 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இரு அணி வீரர்களும் ஒருவரையொருவர் மோதிக்கொண்டனர்.

இந்தப் போட்டியில் ஆர்ஜென்டீன வீரர்கள் மூவருக்கு தலா ஒரு யெல்லோ கார்டும் இங்கிலாந்து வீரர் ஒருவருக்கும் ஒரு யெல்லோ கார்டும் கொடுக்கப்பட்டது. மிகவும் பரபரப்பான ஆட்டத்தின் கடைசி சில நிமிஷங்களில் ஆர்ஜென்டீனா த்ரில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் வென்ற பிறகு, 1982ல் நடந்த போரினைக் குறிப்பிட்டு ஃபாக்லாந்து தீவுக்காரர்கள் ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்தவர்கள் என்ற வாசகங்கள் அடங்கிய (லாஸ் மால்வினஸ் சன் ஆர்ஜென்டினஸ்) போஸ்டரை ரசிகர்கள் ஏந்தி கொண்டாடினர்.

ஆர்ஜென்டின வீரர்கள் பலர் இந்தப் போஸ்டர்களுடன் கொண்டாடியது சர்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசியல், மதம், கருத்தியல் சார்ந்த செய்திகளை அதிகாரபூர்மான போட்டிகளின்போது பயன்படுத்தக் கூடாதென ஃபிஃபா விதிமுறைகளில் இருக்கிறது.

இந்த உலகக் கோப்பையில் ஹைதி அணியின் சீருடைகள் அரசியல் தொடர்புடையதாகக் கூறப்பட்டு மாற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, 2014ல் ஸ்லோவேனியா உடனான நட்பு ரீதியான போட்டியில் ஆர்ஜென்டீனாவுக்கு இதே மாதிரியான போஸ்டருக்காக 20,000 பவுண்டு (ரூ.19,50,000) அபராதமாக விதிக்கப்பட்டது.

தற்போதைய நிலையில் ஆர்ஜென்டீனாவுக்கு இந்த முறையும் அபராதம் விதிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. இறுதிப் போட்டியில் ஸ்பெயினை எதிர்த்து ஆர்ஜென்டீனா விளையாடவிருக்கிறது.

Summary

Argentina risk FIFA sanctions over Falklands Islands banner after England win

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.