ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

நெய்மரை கண்கலங்க வைத்த ஏஐ விடியோ..! 2030 உலகக் கோப்பையில் பங்கேற்பாரா?

பிரேசிலின் நட்சத்திர கால்பந்து வீரர் நெய்மரை கண்கலங்க வைத்த ஏஐ விடியோ குறித்து...

A compilation of AI video clips that moved Neymara to tears.

நெய்மரை கண்கலங்க வைத்த ஏஐ விடியோ காட்சிகளின் தொகுப்பு. - படங்கள்: இன்ஸ்டா / nerdsoul.ai

Published On :14 ஜூலை 2026, 5:19 pm IST

பிரேசிலின் நட்சத்திர கால்பந்து வீரர் நெய்மர் ஜூனியர் (34 வயது) ஏஐ விடியோ ஒன்றுக்கு கண்கலங்கிய நிகழ்ச்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

பிரேசில் அணி ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் நார்வே அணியிடம் 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியுற்று, காலிறுதிக்கு முன்னேறாமல் உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியது. இந்தப் போட்டியில் நெய்மர் கண்ணீருடன் வெளியேறினார்.

இந்தப் போட்டிக்குப் பிறகு நெய்மர், ““நான் முயற்சி செய்தேன். இப்போது எல்லாம் முடிந்துவிட்டது. நான் இங்கேதான் தொடங்கி, இங்கேயே முடித்தேன்” என ஓய்வு குறித்து உருக்கமாகப் பேசினார்.

கடந்த 2010ஆம் ஆண்டு பிரேசில் அணிக்காக அறிமுகமான நெய்மர் 129 போட்டிகளில் 80 கோல்கள் அடித்து, அந்த அணிக்காக அதிக கோலகள் அடித்தவராக முதலிடத்தில் இருக்கிறார்.

இந்த நிலையில், ரசிகர் ஒருவர் ஏஐ விடியோவை உருவாக்கியுள்ளார். அதில் 34 வயதான நெய்மர் சிறுவயது நெய்மரிடம் பேசுமாறு காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த விடியோவின் இறுதியில் 2030 உலகக் கோப்பையுடன் வருங்கால நெய்மர் வருமாறு முடிக்கப்பட்டுள்ளது.

இந்த விடியோவுக்கு நெய்மர் ஜூனியர் இன்ஸ்டாவில் கண்ணீர் எமோஜிக்களை கமெண்டாக பதிவு செய்துள்ளார். இது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 2030 உலகக் கோப்பையில் நெய்மர் விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்பு இன்னமும் ரசிகர்களிடம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Neymar reacts to Artificial Intelligence (AI) video hinting at 2030 World Cup

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.