ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மீண்டும் பிரான்ஸிடம் வீழ்ந்த மொராக்கோ..! முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது லெ ப்ளூஸ்!

கால்பந்து உலகக் கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறிய பிரான்ஸ் அணி குறித்து...

France's Ousmane Dembele (7) celebrates after scoring his side's second goal during the World Cup quarterfinal soccer match between France and Morocco in Foxborough, Mass., near Boston, Thursday, July 9, 2026. (AP Photo/Martin Meissner)

கோல் அடித்த மகிழ்ச்சியில் உஸ்மானே டெம்பேலே மற்றும் பிரான்ஸ் அணியினர். - படம்: ஏபி

Published On :10 ஜூலை 2026, 3:24 pm IST

கால்பந்து உலகக் கோப்பை காலிறுதியில் பிரான்ஸ் அணி மொராக்கோவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியது.

கால்பந்து ரசிகர்கள் பிரான்ஸ் அணியை லெ ப்ளூஸ் (நீல நிறத்தவர்கள்) என்றழைப்பார்கள். இந்த அணி கடந்த உலகக் கோப்பையிலும் மொராக்கோவை அரையிறுதியில் வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் போஸ்டான் கால்பந்து திடலில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 1.30 மணிக்கு தொடங்கியது. இந்தப்போட்டியில் முதல் பாதியில் இரு அணிகளுமே கோல் அடிக்காமல் திணறியது.

முதல் பாதியில் எம்பாபேவுக்கு கிடைத்த பெனால்டியில் அவர் கோல் அடிக்க தவறிவிட்டார். பின்னர், இரண்டாம் பாதியில் 60ஆவது நிமிஷத்தில் எம்பாபே கோல் அடித்தார். அடுத்து 66ஆவது நிமிஷத்தில் டெம்பெலே கோல் அடித்து 2-0 என முன்னிலைப் பெற வைத்தார்.

இறுதிவரை போராடிய மொராக்கோ அணி ஒரு கோல் கூட அடிக்கமுடியாமல் உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியது. கடந்த முறையும் பிரான்ஸ் அணியிடமே மொராக்கோ வீழ்ந்தது குறிப்பிடத்தக்கது. மொராக்கோ ரசிகர்கள் மிகுந்த வேதனையில் இருக்கிறார்கள்.

கடந்த முறை இறுதிப்போட்டியில் தோற்ற பிரான்ஸ் இந்த முறை முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. அநேகமாக ஸ்பெயின் அணியுடன் மோத வாய்ப்பிருக்குமென கணிக்கப்படுகிறது.

Summary

Morocco again knocked out of World Cup by France 2-0, this time in quarterfinals

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.