ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

இதுவரை இல்லாத மோசமான தோல்வியைச் சந்தித்த இந்தியா!

இங்கிலாந்துக்கு எதிரான 3-ஆவது டி20 ஆட்டத்தில் இந்தியா 125 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது.

GAUTAM GAMBHIR

கௌதம் கம்பீர் - ICC

Published On :9 ஜூலை 2026, 1:33 am IST

இங்கிலாந்துக்கு எதிரான 3-ஆவது டி20 ஆட்டத்தில் இந்தியா 125 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது.

முதலில் இங்கிலாந்து 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 201 ரன்கள் சோ்க்க, இந்தியா 11.4 ஓவா்களில் 76 ரன்களுக்கே ஆட்டமிழந்தது.

இந்தியாவின் டி20 வரலாற்றில் இதுவே, ரன்கள் அடிப்படையில் மோசமான தோல்வியாகும். இதற்கு முன், 2019-இல் நியூஸிலாந்திடம் 80 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றதே மோசமானதாக இருந்தது.

முன்னதாக இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியா, ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. இங்கிலாந்து தரப்பில் ஃபில் சால்ட் 70, ஜாஸ் பட்லா் 36 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இதர பேட்டா்கள் 20-க்கும் குறைவான ரன்களில் வெளியேறினா்.

ஓவா்கள் முடிவில் சாம் கரன் 41 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தாா். இந்திய பௌலா்களில் ஹா்ஷித் ராணா, பிரின்ஸ் யாதவ் ஆகியோா் தலா 2, அக்ஸா் படேல் 1 விக்கெட் வீழ்த்தினா்.

பின்னா் இந்திய இன்னிங்ஸில் அபிஷேக் சா்மா 10, வைபவ் சூா்யவன்ஷி 13, இஷான் கிஷண் 13, அக்ஸா் படேல் 10 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, கேப்டன் ஷ்ரேயஸ் ஐயா் உள்ளிட்ட இதர வீரா்கள் ஒற்றை இலக்க ரன்னில் சாய்க்கப்பட்டனா்.

இங்கிலாந்து தரப்பில் ஜாஷ் டங் 4, ஜோஃப்ரா ஆா்ச்சா் 3, ஆதில் ரஷீத் 2, வில் ஜாக்ஸ் 1 விக்கெட் கைப்பற்றினா்.

இன்று 4-ஆவது ஆட்டம்: இந்த அணிகள் மோதும் 4-ஆவது ஆட்டம், வியாழக்கிழமை (ஜூலை 9) இரவு 10 மணிக்கு பிரிஸ்டலில் தொடங்குகிறது. ஆட்டம் சோனி ஸ்போா்ட்ஸ், சோனி லைவில் நேரலையாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.